BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 23 July 2013

நியூஸ் பிட்ஸ்: இண்டெர்நெட் மணி ஆர்டர், சரவண பவனில் இன்கம் டாக்ஸ் ரெய்டு, நித்திஷ்குமார் புத்தி பேதலித்துவிட்டது, கூடங்குளம் நோ வாபஸ்

இண்டெர்நெட் மணி ஆர்டர் - 10 நிமிடத்தில் பணம் சென்று சேரும் சேவையை தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மணி ஆர்டரில் பணம் அனுப்பினால் 2-3 நாட்களிலும் தந்தி மணி ஆர்டர் அதை விட சற்று விரைவாகவும் பணம் சென்று சேரும், வெஸ்டர்ன் யூனியர் போன்ற சேவைகள் மூலம் வெளிநாடுகளிலிருந்தே 20 நிமிடங்களில் பணம் அனுப்பும் நிலையில் தற்போது இந்திய தபால் துறையும் இதை செய்துள்ளது.

இண்டெர்நெட் மணி ஆர்டரில் 10 நிமிடத்தில் பணம் கிடைக்கும், 16 இலக்க பின் நம்பரை பணம் பெற வேண்டியவருக்கு அனுப்பியவர் தெரிவிக்க வேண்டும், பின் அந்த எண்ணை கூறி அடையாள அட்டை காண்பித்து பணத்தை பெறலாம் இதற்கு 10ஆயிரம் வரை அனுப்ப 100 ரூபாய் கட்டணம், 10,000 க்கு மேல் 20,000 வரை 110 ரூப்யா, அதிபட்சம் ரூபாய் 50,000 அனுப்பலாம்

# துட்டு, துட்டு... பளபளக்குது புதுநோட்டு
------------
சரவண பவன், அடையார் ஆனந்த பவனில் இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் ரெய்டு இன்று காலை நடந்தது.

# கணக்கில் வராத பணத்தையெல்லாம் டிப்ஸ் ஆ கிடைத்தது என்று சொல்லிவிட போகிறார்கள் ஆபிசர்ஸ்
-----------
நிதிஷ் குமாருக்கு புத்தி பேதலித்துவிட்டது என பாஜக கடும் தாக்கு

பாஜகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ரகசிய கூட்டு வைத்து தனது அரசுக்கு பிரச்சினை உருவாக்க வேண்டும் என பள்ளி உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததாக நிதிஷ்குமார் கூறி இருந்தார், இதற்கு பதில் அளித்த பாஜக நிதிஷ் குமாருக்கு புத்தி பேதலித்துவிட்டது என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

# நிதிஷ் சார், இன்னும் கொஞ்சம் பெட்டரா டிரை பண்ணலாமே
--------------
கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற முடியாது - தமிழக அரசு வாதம்

கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தற்போது உள்ள சூழ்நிலையில் திரும்ப பெற முடியாது என்றும் சூழல் மாறினால் திரும்ப பெறுவோம் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

# வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மக்கள் தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கனும்
----------
ரிக்ஷாகாரன் கதாநாயகி, நாட்டாமை விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா விஜயகுமார் காலமானார்.

வீட்டில் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மஞ்சுளா விஜயகுமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் இன்று காலமானார். இவருக்கு வயது 59.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான இவர் விஜயகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவருடைய 3 மகள்களான வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியோர் சினிமாவில் கதாநாயகிகளாக நடித்தவர்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media