முதல்வர் ஜெயலலிதா தலைநகரில் இல்லாமல் கொடநாட்டில் முகாமிட்டிருப்பது குறித்து கேள்வி-பதில் பகுதியில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதே என்று விமர்சித்திருந்தார் கருணாநிதி, இதற்கு நீண்ட அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா அதில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது, தனக்குத் தானே பாராட்டு விழாக்களை நடத்திக் கொள்வது, திரைப்படங்களை பார்த்து ரசிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, சினிமா கலைஞர்களை வைத்து தனக்குப் பாராட்டு விழா நடத்திக் கொள்வது, திரைப்படங்களுக்கு கதை எழுதுகிறேன் என்று சொல்லி பணம் சம்பாதிப்பது, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவது, மானாட, மயிலாட நிகழ்ச்சியை கண்டு களிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கினார். அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது. இது நாடறிந்த உண்மை என்று கூறியுள்ளார்.
மேலும் ஒக்கனேக்கலில் வெள்ளத்தில் சிக்கிய நால்வர் மீட்கப்பட்டது, தர்மபுரி இளவரசன் தற்கொலைக்கு பிறகு சாதி மோதல் ஏற்படாத வகையில் தடுத்தது என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டு இதெல்லாம் கொடநாட்டில் இருக்கும் போது செய்தது தான் என்றும் தலைநகரிலேயே எப்பொழுதும் முதல்வர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல. தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்தாலும், மக்கள் நலனுக்கான துரித நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியம்
தற்போது ஈமெயில், ஃபேக்ஸ், மொபைல் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், வீடியோ கான்ஃபிரன்சிங் மூலமாகவே உரையாடுகின்ற வசதி இருக்கின்ற சூழ்நிலையில், கற்கால மனிதரைப் போல் கருணாநிதி அறிக்கை விடுவது அறியாமையின் வெளிப்பாடு என்றும் விமர்சித்தார்.
# தலைவா படம் ரிலீஸ் ஆகாமல் ஆப்பு வைத்ததை லிஸ்ட்டில் சொல்லாமல் விட்டுட்டிங்களே மேடம்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.