BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 10 August 2013

தானாக பற்றி எரியும் குழந்தை - மருத்துவமனையில் அனுமதி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவணம் அருகே உள்ள பரங்குனி கிராமத்தை சேர்ந்த கர்ணன், ராஜேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பிறந்தது. பிறந்த ஒன்பதாம் நாள் அக்குழந்தை திடீரென்று தானாக தீப்பற்றி எரிந்தது. எதேனும் விபத்தாக இருக்கலாம் என பலவாறு தேடியும்  தடயம் எதுவும் கிடைக்காமல் அப்போதைக்கு சமாதானம் ஆகினர் தம்பதிகள்





ஆனால் மீண்டும் 13 ஆம் நாள், 30 ஆம் நாள் என திரும்ப திரும்ப குழந்தையின் உடல் தானாக தீப்பற்றி எரிந்தது, இதனால் குழந்தையின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது, பில்லி சூனிய வேலையாக இருக்கும், மந்திரித்து கட்டுங்கள் என்று அக்கம் பக்கம் இருப்பவர்கள் சொன்னதால் தம்பதியினர் ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் கோயில் கோயிலாக சுற்றியுள்ளனர், சில நண்பர்கள் அறிவுரைக்கு பின்னர் அவர்கள் குழந்தைக்கு மருத்துவமனை சிகிச்சை அளித்துள்ளனர்

குழந்தை ஆரோக்கியமாக தான் இருக்கிறது என தெரிவித்த மருத்துவர்கள், மேலும் குழந்தையை பரிசோதிக்க சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்க செய்தனர், அங்கே குழந்தைக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது, அக்குழந்தையை பலரும் அசியத்துடன் பார்த்து செல்கின்றனர்

இதற்கு ஆங்கிலத்தில் Spontaneous human combustion என்று பெயர், இது குறித்து பைபிளில் கூட இருப்பதாக சொல்கின்றனர், ஆராய்ச்சிபூர்வமாக முதன் முதலில் 1966 ஆம் ஆண்டு 92 வயது முதியவர் ஒருவர் தானாக தீப்பற்றி எரிந்தது அமெரிக்காவின் பெனிசுலோவேனியாவில், அதன் பிறகு இம்மாதிரி தானாக பற்றி எரியும் உடல்கள் கேஸ் இதுவரை 200 க்கும் மேல் உலகெங்கும் பதிவாகியுள்ளது.





மருத்துவ குறிப்புகளில் உடலில் நீர்பற்றாக்குறையும், அதிக அளவு பாஸ்பரஸ் உடலில் கூடுவதும் தான் இம்மாதிரி உடல் தானாக பற்றி எரிய காரணம் என சொல்லப்பட்டுள்ளது, ஆகினும் பல ஆராய்ச்சியாளர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர், இதை சாத்தானின் செயல் என்று விமர்சித்துள்ளனர்( எவ்ளோ கொடுத்து சீட்டு வாங்குனானுங்களோ) இது குறித்து ஏராளமான குறிப்புகள் இணையத்தில் இறைந்து கிடக்கின்றன. நாங்கள் கொடுத்துள்ள ஆங்கில வார்த்தையை கொண்டு தேடி படித்து கொள்ளலாம்!

# குழந்தை நல்லபடியாக வீடு திரும்பும் என நம்புவோம்




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media