புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சவுண்ட் விடும் ஆளுனர்.
புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி சென்ற தேர்தலின் போது காங்கிரஸ்சிலிருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் என்று தனிக்கட்சி ஆரம்பித்து தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அவரது கட்சி வெற்றிபெற்றது. எளிமையானவர், ஊழலற்றவர் என்று பெயர் பெற்ற ரங்கசாமி அவர்களின் ஆட்சியில் சென்ற முறை போலிஸ் அதிக அளவு அதிகாரம் செலுத்துவதாக பிற கட்சியினர்கள் குற்றம் சாட்டினார்கள், இம்முறையோ புதுச்சேரியில் ரவுடிகள் ஆதிக்கம் அதிகமாகியுள்ளதாக பிறகட்சியினர்கள் குற்றம் சாட்டினார்கள், ரவுடிகளை அடக்க கோரி புதுச்சேரியில் கடந்த மாதம் வியாபாரிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர் வீரேந்திர கட்டாரியா பேட்டி அளித்துள்ளார். ஆளுனர் பேட்டியை அடுத்து காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகள் முதல்வர் ரங்கசாமியை பதவி விலக கோரியுள்ளனர்.
மாநிலங்களின் கவர்னர்கள் ஆட்டுக்கு தாடி என்பது போல ரப்பர் ஸ்டாம்ப்பாக இருந்தாலும் மாநில அந்தஸ்த்து இல்லாத புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆளுனரின் பேட்டி முக்கியத்துவமானது, ரங்கசாமியின் ஆட்சி கலைக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.