2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துக்கும் தனக்கும் உள்ள பார்க்கிங் பிரச்சினையை கணக்கு தீர்த்துக்கொள்வதாக நினைத்து திமுகவுடன் இணைந்து அதிமுக-விஜயகாந்த் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார், பிரச்சாரத்தில் விஜயகாந்த்தை படு மோசமாக விமர்சித்தார்.
தேர்தலில் திமுக படுதோல்வியை தழுவ, வடிவேலுவுக்கு ஆரம்பித்தது சனி, இரண்டு ஆண்டுகளாக படம் எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்க இந்த கேப்பில் சந்தானம், பரோட்டா சூரி எல்லாம் பட்டையை கிளப்புகிறார்கள். சந்தானம் ஒரு நாளுக்கு 10 இலட்சம் ரூபாயும், பரோட்டா சூரி ஒரு நாளைக்கு 3 இலட்சம் ரூபாயும் வசூலிக்கிகிறார்கள்.
கருணாநிதியின் பேரன்கள் தயாரிப்பில் கூட வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருந்த வடிவேலு இரண்டு ஆண்டுகாலத்திற்கு பின் தற்போது ஜகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில், தெனாலிராமன் மற்றும் கிருஷ்ணதேவராயர் என இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நாகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், தற்போது ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் ஷூட்டிங் 65 சதவீதம் முடிந்து விட்டது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். போகும் இடமெல்லாம் நீங்க இல்லாத குறையே தெரியல என்று தான் சொல்கிறார்கள். என் படங்களின் காமெடியை பார்த்தால் சுகர், பிரஸர் போன்ற நோய்கள் எல்லாம் குறைந்து போய்விடுகிறது என்று பலரும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இப்போது படங்களில் வரும் காமெடியை பார்த்தால் சுகர், பிரஸர் எல்லாம் கூடி விடுகிறது என்றார். மேலும் இந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியில் எனது குடும்பத்துடன் நன்கு செலவழித்தேன். அதில் கிடைத்த சந்தோஷம் அளவில்லாதது. தெனாலிராமன் படம் திரைக்கு வந்த பிறகு அடுத்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவுள்ளேன். இனி தொடர்ந்து நிறைய படங்களில் நடிப்பேன் என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.