இணைய தளங்களில் நடிகர் விஜய் சர்தார்ஜி போல கிண்டலடிக்கப்படுவதற்கு அவரது ரசிகர்களே காரணம் என்று சொன்னால் மிகையாகாது. சமீபத்தில் #WeLoveVijayAnna என்ற டிவிட்டர் ஹேஷ் டேகில் அவரது ரசிகர்கள் விஜயின் புகழ் பாடும் டிவீட்டுகளை ஆயிரக்கணக்கில் இட்டுத்தள்ள சிலமணி நேரம் இந்த வாக்கியம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.
இந்த குதூகலத்தைக் கொண்டாட முடியாதபடி ஒரு வெள்ளைக்கார பெண்மணி விஜய் ரசிகர்களின் சந்தோஷத்தில் மண்ணை வாரிப்போட்டு விட்டார். இந்த ட்ரெண்ட் டாபிக்கில் இருக்கும் விஜய் அண்ணா என்றால் யாரென்றே தெரியவில்லை என்ற அந்தப் பெண்மணி அதற்கடுத்து அடித்த கமெண்ட்டால் இரு தினங்களாக டிவிட்டரின் விஜய் ஃபேன்ஸ் மற்றும் ஹேட்டர்ஸ் இடையிலான வாய் சவடால் போர் உச்சகட்டத்தை எட்டியது.
விஜயின் ரசிகர்கள் அந்தப்பெண்மணியை மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்து காமெடி செய்து கொண்டிருந்தனர் என்றால் விஜய் எதிர்ப்பாளர்களோ அந்தப்பெண்ணுக்கு ரசிகர் பக்கமே ஓபன் செய்து விட்டனர். நானூறுக்கும் மேற்பட்ட முறை ரீட் டிவீட் செய்யப்பட்டிருக்கும் அந்த சர்ச்சைக்குரிய டிவிட்டை வெள்ளைக்காரப் பெண் இதுவரை டெலிட் செய்யவில்லை. அவர் சாவதானமாக இந்த விளையாட்டை வெகுவாக ரசித்து மகிழ்கிறார் போலிருக்கிறது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.