BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 17 September 2013

மிஸ்.அமெரிக்கா பட்டத்தை வென்றஆந்திர அழகி, கடுப்பாகிய அமெரிக்கர்கள்

மிஸ் அமெரிக்கா பட்டத்தை இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் வென்று விட்டதால் பல அமெரிக்கர்கள் தாம் தூம் என வாஷிங்டனுக்கும், பாஸ்டனுக்குமாக குதித்துக் கொண்டிருக்கிறார்களாம்.


ஒரு இந்தியப் பெண் அமெரிக்க அழகியானதை அவர்களால் ஏற்க முடியவில்லையாம். டிவிட்டர்களில் தாறுமாறாக கருத்தைத் தட்டி விட்டு தங்களது இனவெறியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் சிலர் எப்படி ஒரு முஸ்லீ்மை மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கலாம் என்றும் அரைவேக்காட்டுத்தனமாக கூறியுள்ளனர். ஆனால் மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற இந்திய வம்சாவளிப் பெண்ணான நினா, முஸ்லீம் அல்ல என்பது அவர்களுக்கு தெரியாமல் போனது காமெடிதான்.

ஆந்திரத்து நினா

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் நினா தவுலுரி, மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

முதல் இந்திய அழகி

மிஸ் அமெரிக்கா பட்டத்தை இதுவரை இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் வென்றதில்லை. அந்த வகையில் நினாவின் சாதனையை ஒட்டுமொத்த அமெரிக்க வாழ் இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அதெப்படி...

ஆனால் சில இன்வெறிக் கருத்துக்கள் உடனே அமெரிக்காவிலிருந்து கிளம்பி விட்டன. அமெரிக்கர்கள் பலர் டிவிட்டர்களில் தங்களது அதிருப்தியை வெளியிட ஆரம்பித்து விட்டனர்.

அமெரிக்கர் அல்லாதவருக்கு எப்படி தரலாம்

ஒருவர், நீங்கள் மிஸ் அமெரிக்கா என்பதை உணர வேண்டுமானால், நீங்கள் உண்மையிலேயே ஒரு அமெரிக்கராக இருக்க வேண்டும் என்று கடுப்பாக கேட்டுள்ளார்.

இவர் சொல்றதை பாருங்க...

இன்னொருவரோ, எப்போது வெள்ளை நிறத்தவரை மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்று கத்தியுள்ளார்.

முஸ்லீமைப் போய் எப்படி

இன்னொரு அதிமேதாவி கூறியிருப்பதைப் பாருங்கள்.. எப்படி ஒரு முஸ்லீம் பெண்ணை மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுத்துள்ளனர். இது செட்டப் போட்டி. ஒபாமாவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவருக்கு எக்ஸ்டிராவாக ஒரு ஓட்டு கிடைத்து விட்டது என்று புகைந்துள்ளார். உண்மையில் நினா முஸ்லீ்ம் பெண் அல்ல என்பது கூட இந்த 'பேக்கு'க்குத் தெரியாமல் போச்சே...

மிஸ் கான்சாஸாஸுக்கு ஏன் கிடைக்கலே...

மிஸ் கான்சாஸ் அழகிக்கு பட்டம் கிடைக்காதது குறித்து டாட் ஸ்டேர்ன்ஸ் என்பவர் வாடிப் போய் வசனம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், மிஸ் கான்சாஸ் உண்மையான அமெரிக்க மதிப்பீடுகளைக் கொண்டவர் என்பதால் அவரை நடுவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை போலும்....

பாவம் இவரே கொழம்பிப் போயிட்டாரு...

ஷனான் மெக்கான் என்பவர் ரொம்பவே ஃபாஸ்ட்... தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிஸ் அமெரிக்காவா அல்லது மிஸ் அல் கொய்தாவா என்று கேட்டு பாவம் அவரே குழம்பிப் போய் விட்டார்...

வத்தக் குழம்பில் சாம்பாரைக் கலந்தா...

அதை விட காமெடியாக, மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியுடன் தேவையே இல்லாமல் செப்டம்பர் 11, தீவிரவாதத் தாக்குதல்களை எல்லாம் கலந்து கட்டி கமெண்ட் கொடுத்து களேபரப்படுத்தியுள்ளனர் அமெரிக்கர்கள்....

லூக்கா.. இல்லை.. பேக்கா...

லூக் பிரசிலி என்பவர் கூறுகையில், 9/11 நான்கு நாட்களுக்கு முன்புதான் முடிந்தது. இப்போது மிஸ் அமெரிக்காவா... என்று கேட்டுள்ளார்.

நல்லவங்களும் இருக்காங்கல்ல..

ஆனால் சில நல்லவங்களும் அமெரிக்காவில் இருக்கத்தான் செய்கிறார்கள். டிரம்மர் கொஸ்ட்லவ் என்பவர் வெளியிட்டுள்ள கருத்தில் நினா தவுலுரி வென்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது நல்ல விஷயம், ஆரோக்கியமானதும் கூட. இதுதான் அமெரிக்கா.. என்று பாராட்டியுள்ளார்.

மரியா..ஓ மரியா...

ஆனால் மரியா கான்டிரஸ் என்பவர் ரொம்பக் கேவலமாக பேசியுள்ளார். அதாவது, ஒரு இந்தியரைப் போய் மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு தரம் குறைந்து போய் விட்டனர் நமது மக்கள் என்று அவதூறாகப் பேசியுள்ளார்.
via @Nagoorkani Kader Mohideen Basha in Facebook


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media