ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை என்ன தெரியுமா? ராமராஜன் வாழ்க்கை ஒரு பாடம்...
புதுவையைச் சேர்ந்த அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு ராமராஜன் உள்பட 80 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.
சினிமாவிலும் வாழ்க்கையிலும் பெரு வாழ்வு வாழ்ந்து வீழ்ந்த ஒருவருக்கு எடுத்துக்காட்டு நடிகர் ராமராஜன். சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர், அவரின் அனைத்து படங்களும் சிறப்பாக ஓடி வசூலை குவித்தன, ராமராஜன் திருமணத்திற்கு கலையுலகமே திரண்டது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் நேரில் வந்து வாழ்த்தினார்.
தற்போது திமுகவில் இருக்கும் பாக்யராஜ்க்கும் ராமராஜனுக்கும் யார் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று அழைத்துகொள்வதில் பெரும் போட்டியே நிலவியது, பெயரும் புகழும் செல்வாக்கும் பணமுமாக இருந்த ராமராஜனின் மண வாழ்க்கை முறிந்தது, சினிமாவிலும் வாய்ப்புகள் இல்லாமல், தவறான பல முடிவுகளினால் சொத்தையும் இழந்து கடைசியில் 500 ரூபாய்க்கு கஷ்டப்படுகிறேன் என்று பிரபல வார இதழில் பேட்டி அளிக்கும் நிலைக்கு உள்ளானார்.
1998 இல் ஜெயலலிதாவால் அதிமுக வேட்பாளாராக போட்டியிட்டு எம்பியானார், 13 மாதங்கள் மட்டுமே எம்பியாக இருந்த அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் எம்பியாக இருந்த போது தான் கடைசியாக வயிறு நிறைய சாப்பிட்டேன் என்று கூறியிருந்தார்.
மது அருந்தாமல் புகைப்பிடிக்காமல் படங்களில் நடித்தவர், இவர் இது வரை நடித்த அனைத்து படங்களிலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ளார், வேறு எந்த நடிகருமே செய்யாத சாதனை இது.
பணம், புகழ், தன்னை சுற்றியுள்ள கூட்டம் எல்லாமே நிரந்தரம் அல்ல என்பது புரியாமல் அளவுக்கு மீறிய அரசியல் ஆசை, குடும்பத்தை உதறியது, சுற்றியிருக்கும் காக்கா கூட்ட ஜால்ராக்களை நம்பியது, சொத்துக்களை பாதுகாக்க தவறியது என்று தனக்கு கிடைத்த ஒரு பொன்னான வாழ்க்கையை இழந்து நிற்கும் ராமராஜனின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடமே.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.