BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 26 November 2013

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை, தீர்க்கப்படாத பல மர்மங்கள்

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை, மர்ம வழக்கில் தீர்க்கப்படாத பல மர்மங்கள்

ஆருஷி என்ற 14 வயது சிறுமி தனது வீட்டில் நொய்டாவில் உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்,  அவரை கொலை செய்ததாக அவரது பெற்றோர்களான  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் ஆகிய பல் மருத்துவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு சிபிஐ நீதிமன்றம்.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது


2008ல் இந்த கொலை நடந்ததில் பெரும் திருப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன, ஆருஷி கொலை செய்யப்பட்டு கிடந்தார், அவரது வீட்டில் வேலை செய்த 45 வயது ஹேமராஜ் என்ற நேபாளியையும் காணவில்லை என்பதால் ஹேமராஜ் அதை செய்திருப்பார் என்ற சந்தேகம்  மீது திரும்பியது, ஆனால் ஹேமராஜ் வீட்டு மாடியில் பிணமாக கிடந்தார்.

அடுத்ததாக சந்தேகம் ஆருஷியின் பள்ளி நண்பர் மீது திரும்பியது, கொலை நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னிருந்து ஆருஷியுடன் நட்பாக வளைய வந்த அவரது பள்ளி மாணவர் ஆருஷி இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளார்கள். எனவே அவர் தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் திரும்பியது, இந்நிலையில் மீடியாக்கள் இந்த வழக்கில் அதிக ஆர்வம் காண்பித்தன, ஆருஷியின் பள்ளி நண்பர் தொலைபேசி எண்ணை சேனல்கள் வெளியிட்டன, அந்த மாணவர் மீது சந்தேகம் படர்ந்தது, அந்த மாணவரை சேனல்கள் நேரடியாக போனில் அழைத்து பல சந்தேகங்களை கேட்டனர், அந்த மாணவரை கொலைக்குற்றவாளியாக சித்தரித்தன, ஆனால் விசாரணைக்கு பின் அந்த மாணவர் நிரபராதி என்று தெரியவந்தது, சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. தற்போது 19 வயதான அந்த மாணவர் புதுடில்லி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார், இன்னமும் அந்த சம்பவத்தை மறக்க வில்லை, மீடியாக்கள் மீது குற்றம் சாட்டிய அந்த மாணவர் தேவையற்ற வெளிச்சத்தையும் சந்தேகத்தையும் தன் மீது மீடியாக்கள் பாய்ச்சின என்று குற்றம் சாட்டிய அவர் இன்று வரை தனக்கு ஆருஷியை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.

ஆருஷியும் வேலைக்காரர் ஹேமராஜ்ஜூம் படுக்கையில் ஒன்றாக இருந்ததை பார்த்து கோபமடைந்த அவரது பெற்றோர்களான ராஜேஷ் தல்வாரும், நுபுராவும் தான் இந்த கொலை செய்துள்ளார்கள் என்ற ஒரு தியரி வைக்கப்பட்டது, ஹேமராஜ்ஜூக்கு வயதோ 45, ஹேமராஜ் ஆப்பரேஷன் செய்ய பயன்படும் கூர்மையான கத்தியால் அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார், ஆருஷியின் பெற்றோர்கள் மருத்துவர்கள் என்பதால் இந்த சந்தேகம் மேலும் வலுவானது, ஆருஷியின் பெற்றோர்கள் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார்கள், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது மேலும் கொலையை செய்துவிட்டு ஆதாரங்களை மறைத்துவிட்டதாக போலிஸ் குற்றம் சாட்டியது, இந்த வழக்கில் முதலில் ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தால் தல்வார் தம்பதிகள் விடுவிக்கப்பட்டனர், ஆனால் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

சிபிஐ விசாரணையில் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுரா தான் இந்த கொலையை செய்தார்கள் என்று முடிவு செய்து வழக்கு தொடரப்பட்டது, நேற்று இவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்த சிபிஐ நீதிமன்றம் இன்று இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது, நேற்று தீர்ப்பை கேட்டதிலிருந்து ஆருஷியின் பெற்றோர்கள் சிறையில் உணவு உண்ண மறுத்து வருகின்றனர்.

முதலில் டாக்டர்களின் வேலையாட்கள் மூன்று பேரை கைது செய்த சிபிஐ இவர்கள் தான் குற்றவாளிகள் என்று மீடியாவை கூட்டி சொன்னார்கள், பின் அவர்கள் மீது சாட்சியங்கள் ஏதுமில்லை என்று விடுதலை செய்து விட்டு பின் தான் தல்வார் தம்பதியை கைது செய்தார்கள்.

கொலையை நேரில் கண்ட சாட்சிகள் ஏதும் இல்லை, சந்தர்ப்ப சாட்சியங்கள் ஆருஷியின் பெற்றோர்களுக்கு எதிராக உள்ளது, தன் வயதொத்த ஆண் நண்பருடன் நட்பாக இருந்த ஆருஷி ஏன் 45 வயது வேலைக்காரருடன் பாலியல் தொடர்பு கொண்டிருக்க போகிறார் என்ற கேள்வியும் பல ஆண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாத ஆருஷியின் பெற்றோர்கள் டெஸ்ட் டியூப் பேபியாக பெற்றுக்கொண்ட தனது மகளை கொன்றது ஏன் என்ற கேள்விகள் இன்னும் இந்த வழக்கில் தொங்கிக்கொண்டுள்ளது

ஆருஷியின் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இந்த வழக்கு இன்னும் இந்தியாவின் மர்மம் விலகாத கொலை வழக்கு பட்டியலில் இருந்து நீங்கவில்லை.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media