ஏடிஎம் செக்யூரிட்டிகள், உண்மை நிலை என்ன?
பெங்களூரு ATM சென்டரில் பெண் தாக்கப்பட்ட வீடியோ பற்றி பேசும் பெரும்பான்மையானோர் கூறுவது "செக்யூரிட்டி ஆள் " இல்லாத நிலை பற்றி.
சரி இருக்கும் செக்யூரிட்டி ஆட்கள் எப்படி இருக்கிரார்கள் .
1. 65 வயது தாண்டிய முதியவர்
2. குடிகார செக்கியூரிட்டி
3. ATM சென்டரின் உள்ளேயே கைலி , ஜட்டி எல்லாம் மாற்றி ( உள்ளே இருக்கும் ரூமை பயன்படுத்தாமல் ) உள்ளே வளம் வரும் மியாமி பீச் டூரிஸ்ட் போன்ற செக்கியூரிட்டி
உலகம் முழுக்க 60 வயதுக்கு மேலுள்ளவர்களை ஓய்வெடுக்க வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்க , நம்ம ஆட்கள் வயதானவர்கள் காவல் தெய்வங்களாக நியமிக்கிறோம். உண்மையில் நாம் இதற்காக அசிங்கப்பட வேண்டும். 120 கோடி மக்கள் தொகையில் நமக்கு வயதானவர்கள் தான் காவலராக கிடைக்கிறார்களா ?
வயதானவர்களை காவலராக போடும் ஒவ்வொரு இடத்திலும் கஸ்டமருக்கு ஆபத்து என்பதயும் தாண்டி, வயதான அவருக்குமே ஆபத்து. ஒரு ATM சென்டருக்கு இரண்டு காவலாளிகள் இருப்பது ரொம்பவே அவசியம் என்று தோன்றுகிறது. காவலாளி இல்லாத ATM மை அரசு தடை விதித்தால் தான் இது சரி வருமோ என்னவோ.
தடுக்கி விழுந்தால் பாணி பூரி கடைப்போல் எங்கும் நிறைத்திருக்கும் ATM நிலையங்களுக்கு 200 மீட்டர் ரேடியசுக்குள் ஒரு காவலாளி இருந்தால் இன்னும் நலம்.
ATM சென்டர் மட்டுமல்ல. எந்த இடத்திலும் வயாதனவர்களை காவல் பணியில் வைப்பது சரியான அப்ஷனே இல்லை. வயசாகிவிட்டால் குழந்தைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற தெனாவட்டு எண்ணம் கொண்டவர்கள் தான் , இந்த மாதிரி வயதான செக்கியூரிட்டி ஐடியா கொடுக்கிறார்களோ ?
அப்படியே நாமும் , ATM சென்டரில் லவ்வருடன் கசமுசா செய்வது, கூட்டமான நேரத்தில் குழந்தையை எல்லாம் கூட்டி வந்து " பின் அமுக்கு பாப்போம் ? " ன்னு சொல்லி தர்றது , இந்த மாதிரி சில்லரையான வேலைய நிறுத்துனா நாட்டுக்கு இன்னும் நல்லது.
P.S (நாம எல்லாம் வயசானவங்ளை ட்ரீட் பண்ணுற விஷயத்துல இன்னும் ரொம்ப திருந்தனும், சொரணை வரணும்னு தான் " உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா ? " ன்னு கேக்குறான் )
UmamaheshVaran Lao Tsu ஃபேஸ்புக்கில் எழுதியது

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.