ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து "காங்கிரசும், ஆம் ஆத்மியும் கைகோர்த்து விட்டன..." , "காங்கிரசின் மறு வடிவம் ஆம் ஆத்மி" என்ற வாதங்கள் பாஜகவினரால் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
இது குறித்து மக்களுக்கு சரியான விளக்கத்தை வீடியோ வடிவில் ஆம் ஆத்மி வெளியிட்டு உள்ளது. அதன் சாராம்சம் :-
நாம் ஆட்சி அமைக்க வேண்டுமா? . இரண்டு விதமான கருத்துக்கள் வந்தன.
1. காங்கிரஸ் மற்றும் பாஜகவிடம் இருந்து விலகியே இருப்பது.
2. ஆட்சி அமைத்து, நம்மால் சிறந்த அரசாங்கம் அமைக்க முடியும் என்று நிருபிப்பது.
இக்கருத்துக்கள் பேரார்வத்துடன் முன்வைக்கப் பட்டன. ஆதலால், டெல்லியில் உள்ள 26 லட்சம் குடும்பத்தினரிடம் கருத்து கேட்கப்பட்டது. பெருவாரியான மக்கள் ஆட்சி அமைக்க கூறினார்கள். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். ஆதலினால் சிறுபான்மை அரசு அமைக்கிறோம்.
சிறுபான்மை அரசு என்றால் என்ன?
ஆம் ஆத்மி, ஆளும் கட்சி. பாஜக, காங்கிரஸ் எதிர்கட்சிகள். அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறாது. நிர்வாக முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது. ஊழில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுப்போம்.
18 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
பாரதீய ஜனதாவின் அரசியல் கணக்கு என்ன?
நாம் ஆட்சி அமைக்கா விட்டால், நாம் பொறுப்பை தட்டிக் கழிப்பதாக குற்றம் சாடுகின்றனர். ஆட்சி அமைத்தால், நம்மை காங்கிரசின் மற்றொரு வடிவம் என்கின்றனர். காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா பற்றி நமக்கு கவலை இல்லை. நாம் நினைப்பது சாமானிய மக்களைப் பற்றியே. நமது குறிக்கோள் மக்களின் பிரச்சனைகளை களைவதுதான். தினந்தோறும் மக்களாட்சி ... என்று முடிகிறது அந்த வீடியோ.
வீடியோ தமிழில்
வீடியோ ஆங்கிலத்தில்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.