நீண்ட கால தோழமை கட்சிகளை எதிரிகளாக்கி கொள்வது பாஜகவின் வாடிக்கை போல, பீகாரில் நித்திஷ்குமாரின் மோடி எதிர்ப்பால் உண்டான உரசலால் 17 ஆண்டுகால நட்பு கட்சியான நித்திஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை எதிரியாக்கிக்கொண்ட நிலையில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் மோடி பாஜகவின் 17 ஆண்டுகால மற்றொரு நட்பு கட்சியான சிவசேனாவை கடுப்பேற்றி உள்ளார்.
கடந்த வார இறுதியில் மும்பையில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் மூன்று இலட்சம் பேர் குவிந்தனர், கூட்டத்தை பார்த்த உடன் குஷியான மோடி பேசும் போது மகாராஷ்டிராவும் குஜராத்தும் ஒரே நேரத்தில் பிறந்தவை, ஆனால் குஜராத்தின் வளர்ச்சியை மகாராஷ்டிரா பெறவில்லை, குஜராத் வளர்ச்சியில் எங்கேயோ போய்விட மகாராஷ்டிராவோ பின் தங்கியுள்ளது என்றும் பேசியுள்ளார்,
இதனால் கடுப்பான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பல குஜராத்தியர்கள் மகாராஷ்டிராவை தான் தங்கள் வீடாக நினைக்கிறார்கள், பல மகாராஷ்டிரயர்கள் தான் இந்தியாவின் பணக்காரர்கள் ஃபோர்ப்ஸ் பட்டியிலில் இடம் பெற்றுள்ளார்கள்.
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் வரை மகாராஷ்டிராவின் வளர்ச்சி குஜராத் மோடியின் கீழ் பெற்ற வளர்ச்சியை விட அதிகம் பெற்றிருந்தது, காங்கிரசால் தான் கெட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.
மோடியை பாஜக கூட்டணியின் முகமாக முன்னிறுத்தி காட்டுவது கூட்டணிகட்சிகளுக்கு தர்ம சங்கடம் விளைவிக்கும் என்கிறார், நித்திஷ் குமாருக்கு அடுத்து உத்தவ் தாக்கரேவும் மோடியை ஆதரிக்காத விதமாக பேசியிருப்பது கூட்டணியில் புகைச்சலை உண்டாக்கும் என தெரிகிறது.
மோடி பிரதமர் வேட்பாளர் என்ற போது நித்திஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்த போதும் மோடியை ஆதரித்தது சிவசேனை கட்சி, ஆனால் தற்போது சிவசேனை கட்சி மோடியை விட சுஷ்மா சுவராஜை பிரதமர் வேட்பாளராக இருக்க செய்ய முனைகிறது.
# மோடி சாப், போற போக்கை பார்த்தால் எல்லா கூட்டணியையும் கழற்றிவிட்டு தனியாக நிற்க போகிறீர்கள் போல?!
ஒரு சிறிய வாக்கெடுப்பு
# மோடிக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் லைக் போடவும்.
# மோடி செய்வது சரி, மோடியால் பாஜக, கூட்டணி கட்சிகளுக்கு பலம் என்று நினைப்பவர்கள் கமெண்ட் போடவும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.