ஆயிரம் இருந்தாலும் அவர் என் கணவர், அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா அடித்த அந்தர் பல்டி
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த ராதா என்பவர் பல படங்களில் நடித்தவர், சில நாட்களுக்கு முன் சென்ன காவல்துறையில் ஃபைசூல் என்ற தொழில் அதிபர் ஆறு ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி தன்னுடன் குடும்பம் நடத்தினார் என்றும்,
மேலும் அவருடைய் 50 இலட்சம் ரூபாயை மோசடி செய்து ஏமாற்றி விட்டார் என்றும் புகார் அளித்தார்.
நடிகை ராதா ஏமாற்று பேர்வழி என்றும் அவர் 5 பேரை திருமணம் செய்தவர் என்றும் அவருக்கு 13 வயதில் பிள்ளை இருப்பதாகவும் தொழிலதிபர் ஃபைசூல் தெரிவித்தார். இதை மறுத்த நடிகை ராதா ஃபைசூலின் முன் ஜாமீன் மனுவை எதிர்த்து வாதாடினார்.
ஃபைசூலின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது, இந்நிலையில் திடீரென அந்தர் பல்டி அடித்தார் நடிகை ராதா. நேற்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு கொடுத்தார்.
ஆனால் போலிசார் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த மனுவை ஏற்க முடியாது, கோர்ட்டில் இதை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்கள். இது குறித்து நடிகை ராதா தெரிவித்ததாவது
ஆயிரம் இருந்தாலும் "பைசூல் எனது கணவர்தானே! கோபத்தில் புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் இப்போது மனசு கேட்கவில்லை. அவரும் எத்தனை நாள்தான் ஓடி ஒளிவார். தொடர்ந்து அவரை ஓட விடுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. அதனால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை," என்றார், மிரட்டல் வந்ததா? அல்லது பேச்சுவார்த்தையில் செட்டில் செய்துவிட்டீர்களா என்ற விபரங்களை நடிகை ராதா கூறவில்லை.
# இவங்க பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு கமிஷனர் ஆபிஸ் என்ன ஆலமரத்து சொம்பு நாட்டாமையா?

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.