BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 23 December 2013

பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணைந்து கேம் விளையாடியுள்ளார்களா?

பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணைந்து கேம் விளையாடியுள்ளார்களா?


காங்கிரஸ் இடமிருந்து ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி அதிகாரி பசி கொண்டு அலைவதை காட்டுகிறது என்று பாஜகவின் டில்லி முதல்வர் வேட்பாளராக இருந்த ஹர்ஷ வர்தா தெரிவித்துள்ளார்.

முதல் நாளே ஆம் ஆத்மி கட்சியின் சில எம்.எல்.ஏக்களை பாஜக அணுகியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது, அதே சமயம் தாம் ஆட்சி அமைக்க தயாரில்லை என்றும் காங்கிரஸ், பாஜக யாருடைய ஆதரவையும் கேட்கப்போவதில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி கூறியிருந்தது.

ஆம் ஆத்மியின் இந்த நிலைப்பாடு மக்களிடையே வரவேற்பை பெற்றது.  காங்கிரசின் ஆதரவை பாஜக பெறாது எனவே பாஜக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சியை உடைக்கும் வழி மட்டுமே இருந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் இந்த அறிவிப்பு பாஜகவை எந்த டர்ட்டி கேம்மும் ஆடவிடாது மடக்கி போட்டது, சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானது பாஜக தங்களை அதிகார பசி அற்றவர்களாக ஜெண்டில் மேனாக காட்ட வேண்டிய நிலையை ஆம் ஆத்மி உருவாக்கியது, இந்நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தபோது பாஜவுகும் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டாக நினைத்து பாஜகவும் தான் ஆட்சி அமைக்கவில்லை என்றும் எதிர்கட்சியாக அமர்கிறோம் மறுத்துவிட்டு தனக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மூடி கதவை சாத்தியது. சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானது

அதிக இடங்களில் வென்ற பாஜகவுக்கு தான் ஆட்சி அமைக்கும் தார்மீக உரிமை உள்ளது, இது ஆம் ஆத்மி கட்சிக்கு கிடையாது என்ற நிலையில் அடுத்ததாக ஆம் ஆத்மியை கவர்னர் அழைத்தார், ஏற்கனவே தாங்கள் கூறியபடி ஆம் ஆத்மி யாருடைய ஆதரவையும் பெறாமல் நாங்கள் ஆட்சி அமைக்க போவதில்லை என்று கூறாமல் 10 நாட்கள் நேரம் கேட்டது, அப்படி கேட்டபோதே இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று அனைவரும் கணித்தனர், காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக கூறியது. முதலில் நிபந்தனையற்ற ஆதரவு என்று கூறி தற்போது நிபந்தனை ஆதரவு என்றும் கூறியுள்ளது. 18 கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், பாஜகவுக்கு கடிதம், அரசு அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு என்று பல காட்சிகள் அரங்கேறி இன்று கிளைமாக்ஸ் ஆக அர்விந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று அறிவித்துள்ளார்.

முதலிலேயே ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க தயார் என்று கூறியிருந்தால் பாஜக தனது அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்தியிருக்கும், ஆனால் இது எங்கே இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலை பாதித்துவிடுமோ என்று பாஜக விலக ஒரு கச்சிதமான காட்சிகள் அரங்கேறி விட்டன என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானது

நடந்தவைகள் அனைத்தும் திட்டமிட்ட நாடகமா? அல்லது தற்செயலாக நடந்தவைகளா என்பது ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் எப்படி வரும் காலங்களில் நடந்து கொள்ள போகின்றன என்பதை பொறுத்து தான் அமையும்.

ஒரு சிறிய வாக்கெடுப்பு

இந்த கட்டுரையில் எழுப்பப்பட்டுள்ள சந்தேகம் உங்களுக்கும் உள்ளதென்றால் ஒரு லைக் போடுங்கள்

இல்லை என்றால் உங்கள் கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media