சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் படுதோல்வியடந்த இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
* அயல்நாடுகளில் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் வந்து விட்டது. ஆனால் கேப்டன்சியில் மாற்றம் தேவை.
* பலர் அவரை விமர்சனம் செய்கிறார்கல், சிலர் அறிவுரை கூறுகிறார்கள், அவை அனைத்தும் தனது நல்லதுக்கு என தோனி புரிந்து கொள்ள வேண்டும்.
* அவர் இன்னும் சாதுரியத்துடனும், கற்பனையுடனும் செயல்படுவது அவசியம். டெஸ்ட் போட்டிகளில் நல்ல கேப்டனாக அவர் வரவேண்டுமெனில் விரைவு முடிவுகளை எடுக்க வேண்டும்.
* ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதை போல் , டெஸ்ட் போட்டிகளிளூம் சிறப்பாக செயல்பட வேண்டும்.
* அயல்நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை எதிர்கொள்வது எப்படி என்பதை அறிய தோனி வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தோனி தோல்வியடைந்து வருகிறார்.
* இன்னும் 2 மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் தோனி தன்னை சுயபரீசீலனை செய்து நல்ல கேப்டனாக மாற வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.