தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநிலத்தலைவர் பி.ஜைனூல் ஆபிதின் சூனியம், செய்வினை என்பது உண்மை அல்ல, எனக்கு யாரேனும் சூனியம் வைத்தால் அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார், அந்த சவாலை ஏற்றுக்கொண்ட திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் பி.ஜே வுக்கு சூனியம் வைப்பதாகவும் 48 நாட்களுக்குள் பீஜே சூனியம் செய்வினை உண்மை என்பதை ஒப்புக்கொள்வார் அல்லது தற்கொலை செய்து கொண்டு சாவார்.
இப்படி நடந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அகோரி மணிகண்டனுக்கு ரூபாய் 50 இலட்சம் தரும், இது நடக்கவில்லை என்றால் அகோரி மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்று சூனியத்தை எதிர்த்து பகிரங்க பிரச்சாரம் செய்வார் என்று ஒப்பந்தம் போட்டு அதை பத்திரமாக பதிவும் செய்துள்ளனர்.
முன்பொரு முறை ஒரு விஞ்ஞானி எனக்கு சூனியம் வையுங்கள், சூனியத்தால் நான் பாதிக்கப்பட்டால் 50 இலட்சம் தருகிறேன் என்று விஜய்டிவி நீயா? நானா? நிகழ்ச்சியில் பகிரங்கமாக சவால் விட்டார், அதை ஏற்று சூனியம் வைக்கிறேன் என்று கூறிய ஒருவர் பிறகு பின்வாங்கி விட்டார், அகோரி மணிகண்டன் சூனியம் வைக்கிறேன் என்று எழுதியே கொடுத்துள்ளார்.
செப்டம்பர் 18ம் தேதி தான் இறுதி நாள், அன்று தான் தெரியும் என்ன நடக்கும் என்று.
சூனியம் உண்மையா? பொய்யா? உங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் எழுதுங்கள்
# சபாஷ் சரியான போட்டி

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.