டெபிட் அட்டை (Debit card) இல்லாமலே ATM - களில் பணம் எடுக்கும் புதிய முறையை ICICI வங்கி மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையின் மூலம் வங்கிக் கணக்கு மற்றும் டெபிட் அட்டை
இல்லாமல் ATM மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஜூலை மாதமே வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இந்த சேவை தற்போது தான் மக்களிடம் பிரபலம் அடைந்து வருகின்றது.
பணம் எடுக்கும் முறை
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மற்றொருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் பணம் அனுப்பப்பட வேண்டியவரின் பெயர், முகவரி, அலைபேசி எண்ணை வங்கிக்கு அளிக்க வேண்டும், பின்னர் பணம் அனுப்பியவருக்கு 4- ரகசிய எண் கிடைக்கப்பெறும், பணம் அனுப்பப்பட்டவருக்கு 6- ரகசிய எண் கிடைக்கப்பெறும், பணம் எடுக்க விரும்புபவர் ATM -மிற்குச் சென்று தனது அலைபேசி எண் , அனுப்பியவருக்கு கிடைத்த 4- ரகசிய எண் மற்றும் தனக்கு கிடைத்த 6- ரகசிய எண் குறிப்பிட்டு ATM- வாயிலாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த நவீன முறை 10,000 ATM - நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.