அன்றாட வாழ்வில் வாழைப்பழங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றினை உள்ளெடுப்பதால் பெண்களில் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. American Heart Association இனால் இது கண்டறியப்பட்டுள்ளது. பொட்டாசியத்தின் அளவு குறைவாக உள்ளெடுப்பவர்களை விடவும் அதனை போதிய அளவு உள்ளெடுப்பவர்களுக்கு இந்நோய் மற்றும் திடீர் மரணம் என்பவற்றிலிருந்து விடுபடும் வாய்ப்பு 12 சதவீதத்தால் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவின்படி பொட்டாசியத்தின் அதிகமான நுகர்வினால் தாழ் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.