திருமணம் ஆன புதியதில் கணவர்கள் மனைவியிடம் எதிர்பார்ப்பது கோ ஆப்பரேட்டிவான செக்ஸ் உறவை, இந்திய தம்பதிகளில் ஆண்களின் செக்ஸ் உணர்வை பல விஷயங்கள் பாதிக்கின்றன, இந்திய பெண்களின் கூச்ச உணர்வு இதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. பெரும்பாலான திருமணங்கள் அரேஞ்ச்ட் மேரேஜ் ஆக இருப்பதால் புதிய ஆணுடன் செக்ஸ் உறவு கொள்வதில் பெண்களுக்கு கூச்சம் இருப்பது இயல்பானதே, நாட்கள் ஆக ஆக இந்த கூச்சம் குறைந்துவிடுகிறது.
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இந்திய ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுவது பெண்களின் சாமி கும்பிடும் பழக்கத்தால் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இந்திய பெண்கள் பெரும்பாலும் பக்தியாக சாமி கும்பிடுகிறார்கள், தினமும் காலையும் மாலையும் வீட்டில் சாமி விளக்கேற்றுவது என்பது இந்திய பெண்கள் கடைபிடிக்கும் பழக்கம்.

வீட்டில் சாமி விளக்கேற்றும் போதும், கோவிலுக்கு போகும் போதும் அதற்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டிருந்தால் பெண்கள் தலை குளித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டும், கோவிலுக்கு போக வேண்டும் என்பது ஐதீகம்.தினமும் செக்ஸ் உறவு கொண்டால் சாமி கும்பிட செல்வதென்றால் தலை குளிக்க வேண்டும், எனவே தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்கும் பொறுட்டு தன் கணவருடன் செக்ஸ் உறவு கொள்ள மறுக்கின்றார்கள், இதனால் கணவன் மனைவி அடிக்கடி செக்ஸ் உறவு கொள்வது என்ற நிலை மாறி எப்போது பெண் தலைக்கு குளிக்கலாம் என்று நினைக்கிறார்களோ அப்போது மட்டும் செக்ஸ் உறவுக்கு கணவனை அனுமதிக்கின்ற நிலையால் பல கணவன்கள் சரியான செக்ஸ் உறவு கிடைக்காமல் கோபம் கொள்கின்றனர். இது குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது, சரியான செக்ஸ் உறவு அமையாததால் பலர் விவாகரத்து வரை செல்கின்றனர்.
கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த போது பெரியவர்கள் வீட்டில் கணவன் மனைவி எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கண்காணிப்பார்கள், செக்ஸ் உறவு தம்பதிகளிடம் சரியாக செல்கிறதா என்பதை குறிப்பால் அறிந்து கொண்டு தம்பதிகளுக்கு அறிவுரை சொல்வார்கள், ஆனால் தற்போது பலரும் தனிக்குடும்பமாக இருப்பதால் தம்பதிகளிடையேயான செக்ஸ் உறவு சீராக செல்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.
கட்டுப்பெட்டியாக வளர்க்கப்படும் இந்திய பெண்கள் பலர் செக்ஸ் உறவு கொள்வதை வெறும் குழந்தை பிறப்புக்கு மட்டும் தான் என்று நினைக்கின்றார்கள், மேலும் செக்ஸ் உறவு கொள்வது பாவம் என்றும் கருதுகிறார்கள், இதனால் ஆண்கள் திருப்தியான செக்ஸ் உறவு கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றார்கள், சிலர் விவாகரத்து நோக்கி சென்றால் சிலர் திருமணத்திற்கு வெளியிலான செக்ஸ் உறவுகளை தேர ஆரம்பிக்கின்றனர். சாமி பக்தியுடன் இருப்பது நல்லது தான் என்றாலும் செக்ஸையும் பக்தியையும், பாவமென்றும் குழப்பி கொண்டு தங்கள் செக்ஸ் உணர்வுகளையும் அடக்கி கணவரின் செக்ஸ் உறவையும் திருப்தி செய்யாமல் குடும்ப உறவை சீர்குலைக்கிறார்கள்.
செக்ஸ் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லையென்றால் ஆண்கள் கோபப்பட்டு விவாகரத்து, திருமணத்திற்கு வெளியில் செக்ஸ் உறவுகளை மேற்கொள்வது என இல்லாமல் மனைவியுடன் பொறுமையாக பேசி புரியவைக்கலாம், முடியவில்லை என்றால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடமோ அல்லது மூத்த நண்பர்களிடமோ ஆலோசனை கேட்டு செயல்படலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.