ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை ரகசியமாக திருமணம் செய்து, ஏமாற்றி கற்பழித்துவிட்டார் என கன்னட நடிகை மைத்ரி பெங்களூர் ஆர்.டி.நகர் போலீஸாரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார், இதையடுத்து, கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கவுடாவை விசாரணைக்கு அழைத்தனர், ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கார்த்திக் கவுடாவை கைது செய்ய போலீஸார் தேடிவந்த நிலையில், அவருக்கு கடந்த 8-ம் தேதி நீதிமன் றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், கார்த்திக் கவுடா வெள்ளிக்கிழமை காலை 6.15 மணிக்கு பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் பெங்களூர் மாநகர காவல் துறை துணை ஆணையர் விசாரணை நடத்தினார், அதன் பின் கார்த்திக் கவுடாவை மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.
விசாரணையில் சுமார் 80 கேள்விகள் கேட்கப்பட்டன, இந்த 80 கேள்விகளுக்கும் ஒரே பதிலை சொல்லியுள்ளார் கவுடா, அதில் அவர் குறிப்பிட்டதாவது நடிகை மைத்ரியை தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. தாலி கட்டவில்லை என்றும் அவரது புகார் அனைத்துமே பொய். இதில் அரசியல் சதி இருக்கிறது. எனது தந்தை சதானந்த கவுடாவின் புகழை கெடுக்கும் நோக்கத்தில் இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கார்திக் கவுடா மேலும் சொன்னது என்னவென்றால், நடிகை மைத்ரி கர்நாடகாவில் பிரபலமான திரைப்பட நடிகை, அவர் எனது நண்பர்கள் பலருக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த வகையில் எனக்கும் தோழி ஆனார். அதனால் அவரோடு சில மாதங்கள் நண்பராக பழகினேன். மற்றபடி, அவர் என்னுடைய காதலி அல்ல. மைத்ரி சொன்னது எல்லாமே பொய். வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளன" என்றார்.

கார்திக் கவுடாவுக்கு வேறொரு பின்னுடன் நிச்சயம் நடந்ததையடுத்து மைத்ரி புகார் அளித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.