டென்னிஸில் தற்போது யு.எஸ் ஒபன் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா பட்டம் வென்றுள்ளார். அவர் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். அவர் பிரேசில் நாட்டை சேர்ந்த ப்ருனோ சோர்ஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இந்த ஜோடி இறுதி சுற்றில் 6-1 ,2-6, 11-9 என்று அமெரிக்க-மெக்ஸிகோ ஜோடியை தோற்கடித்தது. சானியா ப்ருனோ ஜோடி இப்போது தான் முதல் முறையாக ஜோடி சேர்ந்து ஆடுகிறது.
சானியாவுக்கு இது 3 வது கலப்பு இரட்டையர் பட்டம் ஆகும். இதற்கு முன் 2009 ஆஸ்திரேலிய ஒபன், 2012 பிரேஞ்சு ஒபன்களில் வென்றுள்ளார். அப்போது இந்தியாவின் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.