BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 31 October 2014

உணவே மருந்து : மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்

5 லட்சம் மாணவர்கள் 5 ஆயிரம் மரக் கன்றுகள் : இதுவே எனது இலக்கு


5 லட்சம் மாணவர்கள் 5 ஆயிரம் மரக் கன்றுகள்!: ஒரு கல்லூரிப் பேராசிரியரின் லட்சியக் கனவு, ‘ஐந்து லட்சம் மாணவர்களை சந்திக்க வேண்டும்; ஐயாயிரம் மரக் கன்றுகளை நட்டு மரமாக்க வேண்டும். இவை இரண்டுதான் எனது வாழ்நாள் லட்சியம்’’ என்கிறார் பேராசிரியர் கேப்டன் ஆபிதீன். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாஹிர் உசேன் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியரான இவர், 13 ஆண்டுகள் என்.சி.சி. ஆபீஸராக இருந்ததால் பெயருடன் கேப்டன் பட்டம் சேர்ந்துகொண்டது. விடுமுறை நாட்களில் தமிழகத்தின் எங்காவது ஒரு மூலையில் கிராமப் புற மாணவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் ஆபிதீன்.


“மாணவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான திட்டமிடல் இல்லாமலேயே கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்களுக்காக, ‘என்ன, எங்கே, எப்படிப் படிக்கலாம்?’ என்ற தலைப்பில் 140 படிப்புகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து 2004-ல் ஒரு புத்தகம் எழுதி 500 மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தேன். அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கே நேரில் சென்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘என்ன படிக்கலாம்.. என்ன படித்தால் எங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கிறது, என்று தமிழகம் முழுவதும் வகுப்புகள் எடுத்து வருகிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் செல்லும்போது மரக்கன்றுகளையும் எடுத்துச் சென்று நடச் செய்வேன். கடந்த 10 வருடங்களில் சுமார் 200 வகுப்புகளை நடத்தி 1.30 லட்சம் மாணவர்களை சந்தித்திருக்கிறேன். எனது சர்வீஸ் முடிவதற்குள் 5 லட்சம் மாணவர் களை சந்தித்துவிட வேண்டும். 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவிட வேண்டும். இதுதான் எனது லட்சியம் என்கிறார் ஆபிதீன். (தொடர்புக்கு.. 9965892706)

பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க ஈரான் வலியுறுத்தல்



அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கைக்கு முன்னதாக, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருக்கிறது. ஈரானின் அணு ஆராய்ச்சியானது ஆயுதத் தயாரிப்புக்கு உதவும் வகையில் உள்ளது என்று அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் கோரி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சிகள் குறித்த உடன்படிக்கையை நவம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென பி-5+1 என்று அறியப்படும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகள் பி-5+1 நாடுகள் என்று அறியப்படுகின்றன. இந்நிலையில், குறிப்பிட்ட நாளுக்குள் உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பில்லை என்று ஈரானின் மூத்த தலைவர் ஒருவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் பொரூஜெர்தி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரம்:

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை படிப்படியாக நீக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அணு ஆராய்ச்சித் திட்டம் குறித்த உடன்படிக்கையானது நவம்பர் 24-ஆம் தேதி கையெழுத்திடப்பட வேண்டுமானால், ஈரான் மீதான பொருளாதாரத் தடை உடனடியாக முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றார். உடன்படிக்கைப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு வந்துள்ள மேற்கத்திய அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாகக் கூறுகையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உடன்படிக்கை ஏற்படுவது சந்தேகம்தான் என்று குறிப்பிட்டார். ஈரான் தனது நிலைப்பாட்டை சற்று விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும் என்று அவர் கூறினார். ஈரானின் அணு ஆராய்ச்சித் திட்டம் மூலம், அந்நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறி வரும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஆராய்ச்சித் திட்டத்தை முடக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை முடக்குவதோடு, அணு ஆயுதத் தயாரிப்புக்கு உதவி வரும் இடங்கள் என்று சந்தேகிக்கும் ஆய்வு மையங்களை மூடி வருகின்றன. அந்நாட்டின் பல்வேறு ஆய்வு நிலையங்கள் தொடர்ந்து சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன. தனது அணு ஆராய்ச்சியை ஈரான் நிறுத்திக் கொள்ளுமானால், அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் படிப்படியாக நீக்கப்படும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன.

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் "முரண்பாடு' : அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பு

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஆர்எஸ்எஸ் சார்புடைய அமைப்புகளும் பாஜக தலைவர்களும் சந்தித்து, நாட்டில் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து விவாதித்தனர். புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களான கிருஷன் கோபால், சுரேஷ் சோனி, தத்தாத்ரேய ஹோஸ்போலே, பாஜகவைச் சேர்ந்த ராம்லால், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பானது, கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் பாஜகவின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.

இச்சந்திப்பின்போது, நாட்டில் கல்விக் கட்டணங்கள் அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்த ஆர்எஸ்எஸ் சார்புடைய அமைப்புகள், அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்யுமாறு அமைச்சர் ஸ்மிருதி இரானியை வலியுறுத்தின. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக் கட்டணத்தை நெறிமுறைப்படுத்த மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும் என்று அந்த அமைப்பின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துமாறும், கல்வித்திட்டத்தில் நல்லொழுக்கப் பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், நாட்டில் வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் உள்ள சில முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள், அமைச்சர் ஸ்மிருதி இரானியைக் கேட்டுக் கொண்டனர்.

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்களுக்கு மத்திய அமலாக்கத் துறை "சம்மன்'

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய பிறகு, அந்த நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் செய்த ரூ.742 கோடி அளவிலான முதலீடுகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. எனினும், இந்த அழைப்பாணையின்படி நிதிப் பரிவர்த்தனை, வங்கிக் கணக்குகள், வருமான வரித் துறை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மாறன் சகோதரர்கள் நேரிலோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ தாக்கல் செய்யலாம் என்று அமலாக்கத் துறை அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை தில்லியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால், எப்போது இவர்கள் ஆஜராக வேண்டும் என்ற விவரத்தைத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்தியாவில் தனக்குச் சொந்தமான ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனப் பங்குகளை 2006-இல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அப்போது மத்தியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐயிடம் 2011-இல் வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, 2011-ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்குப் பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செüத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட்ஸ் ஹோல்டிங்ஸ் (மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் (பிரிட்டன்) ஆகிய நான்கு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை கடந்த புதன்கிழமை சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி பரிசீலித்தார். இதையடுத்து, "சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதுவதால் அவற்றைப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர், நான்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார். இதற்கிடையே, சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் செய்த முதலீடுகள் தொடர்பான நிதிப் பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கருதி, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள குடும்பத்தினர் ஆகியோரது சொத்துகளில் ரூ.742 கோடி அளவுக்கான சொத்துகளை முடக்கிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அமலாக்கத் துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த முதலீடுகள் தொடர்பாக விசாரணைக்கு வரும்படி மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Thursday, 30 October 2014

சிந்தனை களம் : செய்யும் வேலையில் ஈடுபாடு


வேலையிலே மனசு வையுங்க! காட்டு வழியே ஒரு துறவி சென்று கொண்டிருந்தார். அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்த, ஒரு ராஜா மான் மீது அம்பு எய்தான். அது துறவியின் கையில் பலமாகப் பாய்ந்தது. துறவி வலி தாங்காமல் அலறினார். சத்தம் கேட்டு ராஜா ஓடினான். ""சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் அந்தப் பக்கமாக வந்ததை நான் கவனிக்கவில்லை.வேண்டுமென்றே செய்ததாக தயவுசெய்து தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை மன்னியுங்கள்,'' என்று அழாக்குறையாக பேசினான். அது வேண்டுமென்றே நடக்கவில்லை என துறவிக்கும் தெரியும்.மன்னனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்து வந்தனர்.
""கையில் பாய்ந்திருந்திருக்கும் அம்பை யாராவது எடுத்து விட்டால், காயத்துக்கு மருந்து வைக்க நான் தயார்,'' என்றார் 

வைத்தியர். மந்திரி ஒருவர் அதற்கு உடன்பட்டார். இதற்குள் துறவிக்கு தியானநேரம் வந்து விட்டது. எப்படித்தான் அவரது கண்கள் மூடியதோ, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இதுதான் சமயமென, மந்திரி அம்பை உருவி எடுக்க, துறவியோ எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தார்.இதைப் பயன்படுத்தி வைத்தியரும் கையை நன்றாகத் துடைத்து மருந்து வைத்து கட்டி விட்டார். சற்றுநேரம் கழித்து கண்விழித்த துறவி, ""இதெல்லாம் எப்படி நடந்தது?'' என்று கேட்டார். தியானத்தில் மனம் ஒன்றிப் போனதால், நடந்தது எதுவும் தெரியவில்லை. ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

ஐ.நா.பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு



ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுளளது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் மறு தேர்வு பெற்ற ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும். 193 நாடுகள் உள்ள ஐ.நா. சபையில் பொருளாதார, சமூக அமைப்புக்காக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 183 வாக்குகளை இந்தியா பெற்றது.

இந்த அமைப்புக்கான தேர்தலில், ஆசிய-பசிபிக் நாடுகளில் இதுவரை அதிகளவு வாக்குகள் பெற்ற நாடுகளில் இந்தியா முதன்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொருளாதார, சமூக அமைப்பில் மொத்தம் 54 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 18 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தற்போது நடைபெற்றது.

தரமற்ற உணவு : அரசு மருத்துவமனை உணவு விடுதிக்கு சீல்


தரமற்ற உணவு விற்பனை செய்வததாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அரசு மருத்துவமனை உணவு விடுதிக்கு புதன்கிழை சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஒரு உணவு விடுதி இயங்கி வந்தது.

இந்த விடுதியில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு அடிக்கடி புகார்கள் சென்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் விடுதியை கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஆய்வு செய்த அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி, தரமுள்ள உணவுகளை விற்பனை செய்யுமாறு எச்சரிக்கை விடுத்தனர். எனினும் உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் குழு, மீண்டும் உணவு விடுதியை புதன்கிழமை ஆய்வு செய்தனர். அதில் தரமற்ற உணவு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, உணவு விடுதியைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மரக்காணம் கிழக்கு கடற்கரைசாலையில் போலீஸ் குவிப்பு



மாமல்லபுரத்தில் நடைபெறும் அன்புமணி மகள் திருமண நிகழ்வையொட்டி, மரக்காணம், கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் மகள் திருமணம், மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள பாமகவினர் மாமல்லபுரத்துக்கு மரக்காணம், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்கின்றனர்.

ஏற்கெனவே மாமல்லபுரம் மாநாட்டுக்கு வாகனங்களில் சென்றவர்களுக்கும், மரக்காணம் பகுதி உள்ளூர் மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதுபோன்று பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இப் பகுதியில் 2 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள், 19 காவல்துறை ஆய்வாளர்கள், 52 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் 200 போலீஸார் இப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் எஸ்.பி. விக்கிரமன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்



மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27,111.33 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 8,090.45 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.

Wednesday, 29 October 2014

சிந்தனை களம் : அறிவு பாடம்



ஒர் பள்ளியின் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுத்தர விரும்பினார். அவர் அனைத்து மாணவர்களையும் ஒரு பிளாஸ்டிக் பையை வாங்கச்சொன்னார். அந்த மாணவர்களிடம். உங்களுக்கு எத்தனை மாணவர்களின் மீது வெறுப்பு உள்ளதோ அத்தனை உருளைக் கிழங்குகளை போடச் சொன்னார். மாணவர்களும் அப்படியே செய்தனர். சில மாணவர்கள் இரண்டு உருளைக்கிழங்குகளும் ஒரு சிலர் 3 முதல் 5 உருளைக் கிழங்குகளைப் போட்டனர். அந்த உருளைக்கிழங்கு பையை நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு வாரம் உங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார், மாணவர்களும் அப்படியே உற்சாகமாக செய்ய ஆரம்பித்தனர். முதல் இரண்டு நாட்கள் ஆர்வமாகச் செய்ய ஆரம்பித்த மாணவர்கள், பிறகு அவர்களுக்கு அதை எடுத்துச் செல்வது சிரமமாக எண்ணினர். மேலும் உருளைக்கிழங்கு அழுக ஆரம்பித்ததால் துர்நாற்றமும் ஏற்ப்பட்டது. எப்படியோ ஒருவாரம் உருளைக் கிழங்குகளுடன் கழித்து விட்டனர்.

ஆசிரியர் அனைத்து மாணவர்களிடத்தும் கருத்தைக் கேட்டார். அனைவர்களும் ஒரே பதில் தான், நாங்கள் இதனால் சிரமத்துக்குள்ளா னோம் இதனுடைய துர்நாற்றமும், சுமந்துகொண்டு செல்வதும் மிகவும் சிரமமாக இருந்தது ஐயா என்று தெரிவித்தனர். அதற்கு ஆசிரியர் இப்படித்தான் நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்பும் நம் மனபாரத்தை அதிகரிக்கும், நம் மனதை கெடுத்துவிடும் (துர்நாற்றம்) இது நம்மை நாமே கெடுத்துக் கொள்ளும் ஒரு செயல். எனவே இந்தப் பையைத் தூக்கிக் குப்பையில் வீசி எறிவது போல் பிறர் மிது வைத்திருக்கும் வெறுப்பை மனதிலிருந்து தூக்கி எறிவோம். மனதைச் சந்தோசமாக வைத்து அனைத்து செயல்களிலும் வெற்றியும் காணுவோம் என்றார் அசிரியர்.

ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்


1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

மழையால் பாதித்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி


பருவமழை பாதிப்பால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மழை காரணமாக மின்சாரம், இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மேலும் தலா ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார். வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும் வகையிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: வடகிழக்குப் பருவமழை காரணமாக, இந்த ஆண்டு இதுவரை 204.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பாக பெறும் மழை அளவான 151 மில்லி மீட்டருடன் ஒப்பிடும்போது 35 சதவீதமாகும். தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது.

இதுவரை 30 பேர் பலி: பலத்த மழை காரணமாக, மின்சாரம் தாக்கியும், இடி, மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு: பலத்த மழை காரணமாக, சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே பயிர்ச் சேதம் குறித்து சரியாக ஆய்வு செய்ய முடியும். எனவே, வெள்ள நீர் வடிந்த பிறகு ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாலைகளைப் பொறுத்தவரை, பலத்த மழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 797 சாலைகளில் 3 ஆயிரத்து 70 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில், 2 ஆயிரத்து 505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 765 கிலோமீட்டர் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு இயந்திரம் தயார்: இந்த ஆண்டு இறுதிவரை வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து பாதுகாப்பு, மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரம் தயாராக உள்ளது என்று தனது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையாளர் டி.எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பலியான கால்நடைகள்; சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரணம் : மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள், சேதம் அடைந்த குடிசை வீடுகள் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பருவமழைக்கு இதுவரை 108 கால்நடைகள் பலியாகியுள்ளன. அதில், மாடுகளை இழந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், கோழிகளை இழந்தோருக்கு ரூ.100-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 250 குடிசை வீடுகள் முழுமையாகவும், 623 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. முழுவதும் சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, மண்ணெண்ணெய் ஆகிய பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.பருவமழை பாதிப்பால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மழை காரணமாக மின்சாரம், இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மேலும் தலா ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும் வகையிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: வடகிழக்குப் பருவமழை காரணமாக, இந்த ஆண்டு இதுவரை 204.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பாக பெறும் மழை அளவான 151 மில்லி மீட்டருடன் ஒப்பிடும்போது 35 சதவீதமாகும். தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதுவரை 30 பேர் பலி: பலத்த மழை காரணமாக, மின்சாரம் தாக்கியும், இடி, மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்.

பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு: பலத்த மழை காரணமாக, சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே பயிர்ச் சேதம் குறித்து சரியாக ஆய்வு செய்ய முடியும். எனவே, வெள்ள நீர் வடிந்த பிறகு ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சாலைகளைப் பொறுத்தவரை, பலத்த மழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 797 சாலைகளில் 3 ஆயிரத்து 70 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில், 2 ஆயிரத்து 505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 765 கிலோமீட்டர் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு இயந்திரம் தயார்: இந்த ஆண்டு இறுதிவரை வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து பாதுகாப்பு, மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரம் தயாராக உள்ளது என்று தனது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையாளர் டி.எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பலியான கால்நடைகள்; சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரணம்:
மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள், சேதம் அடைந்த குடிசை வீடுகள் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பருவமழைக்கு இதுவரை 108 கால்நடைகள் பலியாகியுள்ளன. அதில், மாடுகளை இழந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், கோழிகளை இழந்தோருக்கு ரூ.100-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 250 குடிசை வீடுகள் முழுமையாகவும், 623 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. முழுவதும் சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, மண்ணெண்ணெய் ஆகிய பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

தில்லி திரிலோக்புரி: ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு



தில்லியின் கிழக்குப் பகுதியான திரிலோக்புரியில் இருதரப்பினர் இடையே மதக்கலவரம் மூண்ட இடங்களில், ஆளில்லா விமானங்களில் கேமராக்களை பொருத்தி செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு மேற்கொண்டனர். அதில், பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வீடுகளில் சோதனை நடத்தி, மோதலின்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கௌரவ், ராகேஷ், பல்ராஜ் குமார், திலக் ராஜ், முகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். திரிலோக்புரியில் மோதல் மூண்ட இடங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் தளர்த்தப்பட்டது.

சீன எதிர்ப்பை மீறி இந்தியா - வியத்நாம் ஒப்பந்தம்



சீன எதிர்ப்பையும் மீறி, தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்வது தொடர்பாக இந்தியா-வியத்நாம் இடையே செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்த வியத்நாம் பிரதமர் குயென் டான் டங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய உறவுகள், பிராந்திய விவகாரங்கள், சுமுகமான கடல் போக்குவரத்து ஆகியவை குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா-வியத்நாம் இடையேயான மற்றொரு எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ராணுவ ஒத்துழைப்புக்கு இந்தியா இசைவு : இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

  • வியத்நாமின் கடற்படைக்கு வலுசேர்க்கும் விதமாக இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான 4 ரோந்துக் கப்பல்கள் அந்நாட்டுக்கு வழங்கப்படும்.
  • இரு நாட்டு ராணுவங்கள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகைகள், ராணுவக் கருவிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றில் கூடுதல் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
  • வியத்நாம் விமானப் படையினருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை இந்தியா அளிக்கும்.
  • பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துதல், கடற்படையினருக்கு பயிற்சி, ராணுவத் தரம் மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் பரஸ்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கும்.
  • தென் சீனக் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதற்கோ, அங்கு விமானங்கள் பறப்பதற்கோ எந்த நாடும் தடைவிதிக்க முடியாது என்ற உறுதிப்பாட்டை இரு நாடுகளும் எடுத்துக்கொள்ளும்.

கருப்புப் பணம் : முழுப் பட்டியலையும் தாருங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு



வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரது பெயர்களையும், புதன்கிழமைக்குள் ரகசிய உறைக்குள் வைத்து அளிக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Tuesday, 28 October 2014

உணவே மருந்து : நல்ல உணவுக்கு அளவுகோல்


நாம் உண்ணும் உணவு சரியானதுதானா என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு எளிய அளவுகோல் உள்ளது. ஆதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும். 

விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.  அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம். அந்த நேரத்தில் உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே! அப்படிப் பார்க்கும்போது பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை. அதே சமயம் அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். ஆதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள். எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.  ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.


இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும். அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன. அதனால்தான் இயற்கை உணவுகள் பெரும்பாலும் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை என்னும் அதேநேரம் சமையல் உணவுகள் தண்ணீரை நிறையவே சார்ந்திருக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்னொரு புஷ் போட்டி?

அமெரிக்க அதிபர்களாக இருந்த புஷ் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புஷ் 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஜார்ஜ் புஷ் 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். அவரது மகன், ஜார்ஜ் டபிள்யு புஷ் 2001-ஆம் ஆண்டு முதல் 2009 வரை அதிபராக இருந்தார். இந்த இரு புஷ்களையடுத்து, அவர்களது குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. அவர் பெயர் ஜெப் புஷ். இவர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய புதல்வர். ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் இளைய சகோதரராவார். ஜெப் புஷ், ஃபுளோரிடா மாகாணத்தின் ஆளுநராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர். இவரது மகன் ஜார்ஜ் பி. புஷ், ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில், அதிபர் தேர்தல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, குடியரசுக் கட்சி சார்பில் ஜெப் புஷ் போட்டியிட குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர் என அவரது மகன் கூறினார். அதிபர் தேர்தலில் ஜெப் புஷ் போட்டியிடுவதை அவரது தந்தையும் சகோதரரும் எப்போதுமே ஆதரித்து வந்ததாக ஜார்ஜ் பி. புஷ் கூறினார். ஆனால் ஜெப் புஷ்ஷின் தாயார் இதற்கு முழு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நவம்பர் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு, குடியரசுக் கட்சி சார்பில் ஜெப் புஷ் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. ஜெப் புஷ்ஷின் தந்தை, ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்தில் இராக் எதிராக அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கியன. ஜெப் சகோதரர் ஜார்ஜ் டபிள்யு புஷ் பதவி வகித்த காலத்தில், இராக் அதிபர் சதாம் உசைன் பதவி நீக்கம், அவரது மரண தண்டனை நிறைவேற்றம் நடைபெற்றன. 2001-ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் தேடப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தீவிரப் புயலாக மாறிய "நிலோஃபர்'



அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் புயல், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள நலியா கிராமம் அருகே வரும் 31ஆம் தேதி கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் 2ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  மத்திய அரசு அவசர ஆலோசனை: நிலோஃபர் புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் முன்கூட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு திங்கள்கிழமை அவசர ஆலோசனை நடத்தியது.

2ஜி: வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில் அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் முன்வைத்த வாதம்: "வயோதிகம், ஞாபக மறதி நோய் போன்றவற்றால் தயாளு அம்மாள் பாதிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது. இதுபோன்ற நிலையில், அவரால் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வாதங்களை முன்வைக்க முடியும்? இதை சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட்டபோதும் அதன் சிறப்பு நீதிபதி எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி எச்.எல். தத்து கூறியது: "தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஞாபக மறதியால் பாதிக்கப்படும் நபர் உணராதபோது அவரால் வழக்காட முடியாது என்பதை நீதிமன்றம் உணர்கிறது. ஆனால், இதுபோன்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டு அதன் சிறப்பு நீதிபதி திருப்தியடையும் வகையில் ஆவணங்களைத் தாக்கல் செய்யுங்கள். இந்த மனுவை தற்போதைய நிலையில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று கூறினார். கூடுதல் சாட்சிகள்: இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் மத்திய அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்பட கூடுதல் நபர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்ய அனுமதி கேட்டு, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இதை சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி திங்கள்கிழமை விசாரித்த போது, சிபிஐ வழக்குரைஞர் கே.கே.கோயல் ஆஜராகி, "சிபிஐ மனு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டோர் பதில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றின் மீது பதில் அளிக்க கூடுதல் அவகாசம் தேவை' எனக் கேட்டுக் கொண்டார். இதை ஏற்று இந்த மனு மீதான அடுத்த விசாரணையை வரும் நவம்பர் 10-ஆம் தேதி சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.

பின்னணி: "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவிக்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ரூ.200 கோடி அளவுக்கு நிதிப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இந்தப் பரிவர்த்தனையை சட்டவிரோதம்' என்று மத்திய அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் பி. அகர்வால், கரீம் மொரானி, கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத் குமார், தயாளு அம்மாள், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாகி அமிர்தம் ஆகிய 10 பேர் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் தயாளு அம்மாள் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவை வரும் 31-ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது.

கருப்புப் பணம்: மேலும் 8 பேர் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்



வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான "டாபர் இந்தியா'வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வெளிநாட்டு வங்கிகளில், பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ சுரங்க நிறுவனம், அதன் இயக்குநர்கள் ராதா சதீஷ் டிம்ப்லோ, சேத்தன் எஸ் டிம்ப்லோ, ரோகன் எஸ் டிம்ப்லோ, அண்ணா சி டிம்ப்லோ, மல்லிகா ஆர் டிம்ப்லோ ஆகிய 8 பேர் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இவர்களில், பர்மனின் பெயர், பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டது. மற்ற 7 பேர் விவரம், பிற வெளிநாடுகளின் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டது.

இதேபோல், வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் மற்ற அனைவரது பெயர்களையும் வெளியிடுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. எனினும், வெளிநாட்டு வங்கிகளில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் அனைவரது கணக்குகளையும் சட்டவிரோதமானவையாகக் கருத முடியாது. ஏனெனில், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் கிடைக்கும்வரை பிற விவரங்களை அரசால் வெளியிட முடியாது. ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவில், நாட்டு மக்களுக்கு ரகசியத்தைக் காக்கும் அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. ஆகையால், அந்த உரிமையை அரசால் நிராகரிக்க முடியாது. மேலும், அரசமைப்பு சட்டத்தின் 32(1)ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படுகிறவரை, வெளிநாடுகளிடம் இருந்து பெறப்பட்ட மற்ற பெயர் விவரங்களை அரசால் வெளியிட முடியாது.

முந்தைய உத்தரவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: கருப்புப் பணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முதலீடு செய்த அனைவரது பெயர்களையும், அவை கருப்புப் பணம் இல்லாத பட்சத்திலும் வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அந்தப் பெயர்களை வெளியிட்டால், அதுதொடர்பாக பிற நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்வதில் பிரச்னை ஏற்படும். கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்பட அரசு தன்னிடம் இருக்கும் விவரங்களை வெளியிடாமல் வைத்திருப்பதில், எந்த உள்நோக்கமும் கிடையாது. பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு வசதியாகத்தான், முந்தைய உத்தரவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் அரசு கோருகிறது.

பல்வேறு ஒப்பந்தங்கள் அடிப்படையில் அந்த விவரங்களை இந்தியா பெற்றுள்ளது. சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகள் முடிந்த பிறகு, அதில் வரி ஏய்ப்பு செய்தோரின் விவரங்களை அரசு வெளியிடும் என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டாபர் மறுப்பு: இதனிடையே, பிரதீப் பர்மன் வெளிநாட்டு வங்கியில், கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கவில்லை என்று டாபர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிரதீப் பர்மன், வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தபோதுதான் அந்தக் கணக்கு தொடங்கப்பட்டது. அனைத்துச் சட்டங்களுக்கும் உள்பட்டே நாங்கள் செயல்படுகிறோம். நாங்களே முன்வந்து கணக்கு தொடர்பான தகவலை அளித்தோம். மேலும், சட்டப்படி வருமான வரி உள்பட அனைத்து வரிகளையும் செலுத்தியுள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில் கணக்கு இல்லை-லோடியா: இதேபோல், சுவிட்சர்லாந்து வங்கியில் தனக்கு கணக்கு கிடையாது என்று பங்கஜ் சிமன்லால் லோடியா மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வருமான வரித் துறையிடம் இந்தத் தகவலை ஏற்கெனவே தெரிவித்து விட்டோம்' என்றார்.

ராதா டிம்ப்லோ கூறுகையில், "மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை முதலில் நான் படித்துப் பார்க்க வேண்டும்; அதன்பிறகுதான் கருத்துத் தெரிவிக்க முடியும்' என்றார். பின்னணி: மத்தியில் முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி, லீச்டென்ஸ்டெய்ன் நாட்டின் எல்.எஸ்.டி. வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த 18 பேரின் பெயர்ப் பட்டியலை தாக்கல் செய்தது. அதில், அம்ரூவோனா தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் மனோஜ் துபேலியா, அம்ப்ரீஷ் துபேலியா, பவ்யா மனோஜ் துபேலியா, மனோஜ் துபேலியா, ரூபால் துபேலியா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சிலரது பெயர் விவரங்களை சீலிட்ட உறையில் ரகசியமாகத் தாக்கல் செய்தது. எனினும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரமில்லை என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், மத்தியில் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Monday, 27 October 2014

உணவே மருந்து : மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

மா, பலா, வாழை இவை மூன்றும் முக்கனிகள் என்பது நமக்கு தெரியும். முக்கனிகளின் பயன்கள் பல உள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இவற்றில் முதலில் நாம் மா பற்றி பார்ப்போம்.

  • தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நோய் குணமாகும்.
  • தினமும் உணவில் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஊக்கத்துடன் பிறக்கும்
  • மாம்பழத்தில் வைட்டமின் எ சத்து உள்ளதால் நல்ல கண் ஒளிதருகிறது இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உண்பதால் இரத்தம் அழுத்தம் சீராகும்.
  • மாம்பழம் பப்பாளி இரண்டையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலநோய் சரியாகும்.
  • மாமரத்தின் தளிர் இலை உலர்த்தி பொடியாக்கி ஒரு ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
  • மாவிலை பறித்து பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் உறுதியாகும்.
  • மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒரு நாள் இரண்டு வேளைகொடுக்க குடல் பூச்சி அகலும்.
  • மாவிலை பறித்து தணலில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டை கட்டு ,கமறல் குணமாகும்.
ஆகவே மாம்பழம் சாபிடுவோம் உடல் நலம் காப்போம்.

ஆதார் அட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் ஆதரவு



ஆதார் அட்டை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த அட்டைக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது பயனாளிகளுக்கு எந்த நேரத்திலும், எங்கும், எப்போதும் அங்கீகாரத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ஆதார் எண் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த அட்டையானது ஒருவரின் அடையாளத்தை சர்வதேச அளவில் சரிபார்க்க அனுமதிக்கிறது. ஆதார் அட்டை பின்தங்கிய மக்கள், வங்கி வசதி தேவைப்படுவோருக்கு வங்கி வசதி உள்ளிட்ட உரிய சேவைகளை வழங்க உதவியாக இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம்: இந்தியா தன்னிச்சையாக தீர்வுகாண அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண பாகிஸ்தான் அனுமதிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்தார். இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண முயற்சித்து வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சியை வெற்றியடையச் செய்ய விடமாட்டோம். பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் அதை எங்கள் நாட்டின் பலவீனமாக தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகள், மனித உரிமை மீறல்களை எங்கள் நாட்டின் தூதர்கள், பிரநிதிகள் குழுவினர் மூலம் பல்வேறு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஐ.நா. சபை கொண்டுவந்த தீர்மானங்கள் இன்னும் பொருத்தமானதாகவே உள்ளன. அந்தத் தீர்மானங்களுக்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் மாற்றாக முடியாது. காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழுவின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, சர்வதேச நிலையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்தில் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐ.நா. பொதுச் செயலர் பான்-கீ-மூனுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியிருந்தது. மேலும், இந்திய பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாதிப்புக்குள்ளான கிராமங்களை ஐ.நா. கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.

மூளைப் புற்று நோயை குணப்படுத்தும் ஸ்டெம் செல்: இந்திய - அமெரிக்க மருத்துவர் சாதனை


புற்றுநோய் மருத்துவத் துறையில் ஒரு திருப்புமுனையாக, மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய - அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இயங்கி வரும் ஹார்வர்டு குருத்தணு ஆய்வு மையத்தில், அவரது தலைமையில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தச் சாதனையை புரிந்துள்ளது. இந்தக் குழு உருவாக்கிய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குருத்தணுவை, எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில், அருகிலுள்ள பிற உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், புற்றுநோய் அணுக்களை மட்டும் கொல்லும் நச்சுப் பொருளை அந்தக் குருத்தணுக்கள் வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது.

இந்தப் பரிசோதனை குறித்து காலித் ஷா கூறியதாவது: மூளைப் புற்று அணுக்களை அழிக்கும் திறன் குருத்தணுவை சில ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் கண்டறிந்தோம். எனினும், அந்தக் குருத்தணு வெளிப்படுத்தும் நச்சுப் பொருளால், புற்று நோய் அணுக்கள் மட்டுமின்றி, அந்த குருத்தணுவும் கொல்லப்பட்டது. தற்போது, தாம் வெளிப்படுத்தும் நச்சுப் பொருளிலிருந்து தன்னையே காப்பாற்றிக் கொள்ளும் வகையில் அந்தக் குருத்தணுவில் மரபணு மாற்றம் செய்துள்ளோம் என்றார் அவர். இந்த ஆய்வின் மூலம், மூளைப் புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகளைத் தயாரிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளதால், இது புற்று நோய் மருத்துவத்தில் ஒரு திருப்புமுனை என்று கூறப்படுகிறது. காலித் ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்.

Saturday, 25 October 2014

கத்தி படத்தின் கதை சுட்டக் கதையா ?? வெளிவந்தது முருகதாஸின் மோசடி .. பேஸ்புக் பதிவரின் கட்டூரை ..


 தீபாவளி அன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி திரைப்படம் வெளிவந்தது . இந்த படத்தின் கதை பலரின் பாராட்டைப் பெற்றது . ஆனால் இப்போது இந்த கதை முருகதாஸின் கதை இல்லை என்றும் இன்னொருவரின் கதை என்றும் பேஸ்புக்கில் பரவலாக செய்திகள் வருகிறது . இது குறித்து இரண்டு பதிவர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர் . அது கீழ் வருமாறு :

பா.ஏகலைவன் ( குமுதம் பத்திரிக்கையில் பணியாற்றியவர் ) :

நாலு இட்லி+ஒரு டீ= ‘கத்தி’ சுட்ட கதை
---------------------------------------------------------
சரியாக ஐந்தாண்டுகள் இருக்கும். குமுதத்தில் இருந்த நேரம். பத்திரிகையாளர் தேவா மூலம் அறிமுகமானார் கோபி.அதிக படிப்பாளி. படைப்பாளியும்கூட. திரைப்படக்கதை மற்றும் இயக்கம் பற்றி பிரமிப்பாக பேசுவார். வீட்டிற்கு வந்தாரானால் மணிக்கக்கில் விவாதம் நீளும். அப்படித்தான் தண்ணீருக்கான அரசியல், பன்னாட்டு பெரு முதலாளிகளின் பங்கு என்ற விதத்தையும் விவரித்தார். அவரது பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து. எப்படி என்றால் திரைக்கதையாகவே. முற்போக்கு சிந்தனையோடு இப்படி மக்கள் பிரச்சனையை அனுகும் விதம் சினிமாவில் குறைவு.
இப்படியான சந்திப்பின் போதுதான் ஒரு நாள் எனக்கும் அவருக்குமான ‘எடக்கு முடக்கான’ கதையும் நடந்தது.
“காவிரி தண்ணீர் பிரச்சனை என்றால் தஞ்சை விவசாயி மட்டும்தானே போராடுறான். அங்கிருந்து கொஞ்சம் விவசாயிகள் சென்னை வந்து நம்ப கண்ணு முன்னதான் போராட்டம், ஆர்ப்பாட்டம்னு நடத்துறான். இதை சென்னை வாசிகள் வேடிக்கை பார்த்தபடியே, ‘நமக்கென்ன வந்தது’ என்று போகிறானே ஏன். தண்ணீர் கஷ்டம் பற்றி அவனுக்கு தெரியல. தெரியனும்னா என்ன செய்யனும் வீராணம் குழாய உடைக்கனும். பூண்டி நீர்தேக்கத்தை முடக்கனும். அதுவும் விவசாயிகளே செய்யனும். நமக்கு சோறு போடுற விவசாயிகளோட கஷ்டம் அப்பதான் இந்த நகரவாசிகளுக்கு புரியும். ரெண்டு நாள்..இரண்டே இரண்டு நாள், குடிக்கவும் குடிநீர் இல்லாம தவிச்சானா, காவிரி நதிநீர் பிரச்சனையும், தஞ்சை விவசாகிளோட போராட்டத்தையும் புரிஞ்சுக்குவான் இல்ல” என்று கோபி உணர்ச்சிவசப்பட்டு பேச, அது தீவிரவாதமில்லையா என்று நான் கூற, காவல்துறையை ஏவி மக்களை தாக்குவது என்ன புனித போராட்டமா, இல்ல தீவிரவாதமா என்று அவர் கேட்க கடைசியில் கரடுமுரடா முடிந்தது...
பிறகு ஒரு நாள் வந்தார். பிரபல! இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் இந்த கதையை பற்றி சொன்னதாக கூறினார். இன்னும் சில மாதம் கழித்து சந்தித்தபோது, ஷாட் பை ஷாட்டாக சொல்லி விவாதித்துள்ளேன். படத்தை அவர் தயாரிப்பதாகவும், நான் இயக்குவதாகவும் திட்டம் என்றார். மகிழ்ச்சி, தீவிர உழைப்பிற்கு வெற்றி கிடைக்கட்டும் என்றேன்.
அடுத்த ஓரிரு மாதம் கழித்து சந்தித்த போது ‘தினமும் முருகதாஸிடம் கதை விவாதம் நடப்பதாக சொல்கிறீர். முன்பணம் ஏதாகிலும் கொடுத்தாரா. அல்லது செலவுக்கு ஏதேனும் தந்ததாரா என்றேன். நக்கலாக சிரித்துவிட்டு ‘இந்த ஒன்னறை வருஷத்தில் நாலே நாலு இட்லி. ஒரு டீ அவ்வளவுதான் வாங்கிக்கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூரு ரூபாய் மட்டும் கொடுத்தார். அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார் என்றார் வேதனையோடு.
இப்படி ஒன்னறை வருடமாக சிரமப்பட்டு போய் கதைசொல்லி விவாதித்து முடிந்த படம்தான் இன்றைய ‘கத்தி’ திரைப்படம்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸே ‘சொந்தமா யோசிச்சு’ எடுத்த படம்....
போகட்டும். இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் நண்பர் கோபி. இவருடைய கதை ஸ்கிரிப்ட், ஷாட் பை ஷாட்டாக கொடுத்திருந்தார். வழக்கு சொதப்பலானது. காரணம் வேற.
இப்போது மீண்டும் புதிய வழக்கறிஞரை பிடித்து..மீண்டும் வழக்கு போட்டிருக்கிறார். ஆனால் நண்பர் கோபி நீதிமன்றத்தில் கதையை கொடுத்ததை போல தைரியமாக எதிர் தரப்பு கொடுக்கவில்லை. உதவாத காரணங்களை சொன்னது. இப்போது படத்தை பார்த்துவிட்டு கோபி கதறுகிறார். ஒவ்வொரு காட்சியும் நான் சொன்னதேதான். காவிரி விவசாயி பிரச்சனைகூட, பூண்டி நீர் தேக்கத்தை முடக்கனும், வீராணம் குடிநீர் குழாயை மூடனும் என்று சொன்னதைகூட எடுத்து காட்சி படுத்தியிருக்கிறார்கள். நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ஸ்கிரிப்ட்ல எல்லாமும் அப்படியே இருக்கு என்று புலம்புகிறார்.
பணபலம், அதிகார பலம், செல்வாக்கு எல்லாம்
‘எப்போதும் ஏற்றமாகவே’ இருந்துவிடுமா என்ன?
மீண்டும் வழக்கு தொடர்கிறது. இந்தமுறை தாஸுக்கு
தாவு தீர்ந்துவிடும் என்கிறார்கள். பார்ப்போம்.
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.
உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.

Muthu Krishnan :

இன்று தீபாவளி ரிலீஸ் கத்தியை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது அதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் ஸ்டேடஸ் போட்டு பலர் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த படத்தின் கதையை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது நண்பன் கோபியிடம் கேட்டிருக்கிறேன், அவன் இதற்கு வைத்திருந்த பெயர் ’மூத்த குடி’. ஒன்றரை ஆண்டுகள் அவன் இயக்குனர் முருகதாஸ் அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற வண்ணம் இருந்தான், அவனுக்கு எல்லா உயரிய உபசரிப்புகளும் வழங்கப்பட்டது, இறுதி உபசரிப்பாக அவனது கதை களவாடப்பட்டுவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான், வாய்தா மேல் வாய்தா, அவனது கதையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தான், வழக்கம் போலவே பணம் பாதாளம் வரை பாய்ந்தது, சாதி படுக்கை அறை வரை பாய்ந்தது, மிச்ச மீதி எல்லாம் பாய வேண்டிய அளவுக்கு பாய்ந்தது. இரு மாதங்கள் முன்பு நக்கீரன், ஜீவி யில் கோபியின் கதை பெரும் செய்தியாக பிரசுரமானது, ஆனால் இன்று மொத்த உலகமும் வேறு ஏதேதோ கதைத்துக் கொண்டும் கத்திக் கொண்டும் எல்லாவற்றையும் கடந்து செல்கிறது, ஒன்று மட்டும் நிச்சயம் இது போல் ஓராயிரம் கோபிக்கள் சென்னையின் ஏதோ ஒரு மொட்டை மாடியில் இரவு உணவுக்கு வழி இல்லாமல் உறக்கமில்லாமல் புரண்டுகொண்டிருப்பார்கள், அல்லது தங்களின் அடுத்த கதையை பற்றி சிந்தித்துக் கொண்டு நட்சத்திரங்களையும் வான வேடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருப்ப்பார்கள். உலகமே வழுத்தவர்கள் பக்கம் நின்றாலும் கூட எனது மனம் இவர்களின் பக்கமே நிற்க முயலுகிறது.

Thursday, 23 October 2014

பொது அறிவு : வினா விடை



01. வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களில் பாரமானது எது?

தங்கம்

02. வண்ணாத்திப்பூச்சியின் கால்கள் எத்தனை?
ஆறு

03. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எது?
சீனா

04. அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் எது?
அலாஸ்கா

05. அதிகளவு பரப்பளவைக் கொண்ட நாடு எது?
ரஸ்யா

06. 2008 இல் ஒலிம்பிக் விளையாட்டை நடாத்திய நாடு எது?
சீனா

07. அமெரிக்காவில் பிரபலமான உள்ளக விளையாட்டு எது?
கூடைப்பந்து

08. பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் பூட்ஸ் அவர்களது தாயாரின்
நாடு எது? தாய்லாந்து

09. Aurora Borealis பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
Northern Lights

10. உலகில் அதிகளவில் காணப்படும் தொற்றலடையாத நோய் எது?
பற்சிதைவு

பொது அறிவு : இந்திய குடியரசு தலைவரின் அதிகாரம்



  • இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். 
  • இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' (ஐங்ஹக் ர்ச் ற்ட்ங் ள்ற்ஹற்ங்), "நடைமுறைத் தலைவர்' (எர்ழ்ம்ஹப் ஈட்ண்ங்ச்), "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
  •  இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் 
  •  இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார். 
  • மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். 
  • குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்
  • ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். 
  • குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.
  • குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம். 
  • குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும். 
  • குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

விரைவில் நடக்க இருக்கிறது விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா திருமணம் ??



இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உள்ளதாக தெரிகிறது . இவர்கள் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது தொடர்பாக கோஹ்லியின் தாய் அனுஷ்கா சர்மா வீட்டினரை பார்த்து பேசி விட்டார் என்றும் கூறுகிறார்கள் .

இந்த சந்திப்பு தான் இது போன்ற செய்திகள் பரவுவதற்கு காரணம்  . இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர் . ஆனாலி இது குறித்து இருவரும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை . 

சியோமி மொபைல்களை பயன்படுத்தாதீர்கள் - எச்சரிக்கிறது இந்திய விமானப் படை !!



சியோமி மொபைல் நிறுவனம் இந்தியாவில் தனது மொபைல்களை அறிமுகப்படுத்தி இந்திய மக்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றது . சீன தயாரிப்பான இந்த மொபைலின் தனி நபர் பாதுகாப்பு குறித்தும் , மற்ற பாதுகாப்புகள் குறித்தும் கேள்வி எழுந்தது . இப்போது இந்திய விமானப்படை அதிகாரிகள் அவர்களது அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரை இந்த மொபைல்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது .

விமானப்படையிடம் இருந்து வெளிவந்த அறிவிப்பின்படி இந்திய கண்ணி தொடர்பு மையத்தின் தகவல்கள் படி இந்த சியோமி மொபைல்கள் சில தகவல்களை சீனாவுக்கு அனுப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது . ஆனால் கணிணி தொடர்பு மையம் எதனடிப்படையில் இதனை தெரிவித்து இருக்கிறது என தெரியவில்லை .

சியோமி நிறுவனம் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் , ஆனால் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியில் ஒரு பகுதியாக சில தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றது . இதேப் போன்று தான் சியோமி நிறுவனம் தைவான் நாட்டிலும் தகவல்களை அனுப்பவதாக பிரச்சனை வந்துள்ளது . 

விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கையில் ரசிகர் தவறி விழுந்து பலி !!


நடிகர் விஜய் நடித்த " கத்தி " நேற்று பல பிரச்சனைகளுக்குப் பின் வெளிவந்தது . இந்தப் படத்தைப் பார்த்து முடித்து விட்டு ரசிகர் ஒருவர் உயரமான கட் அவுட் ஒன்றில் பாலாபிஷேகம் செய்யும் போது தவறி கீழே விழுந்து பலியானார் . இந்த சம்பவம் கேரளாவில் பாலக்காட்டு பகுதியில் நடந்துள்ளது .

கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் . இதற்காக அங்கே இரயில்களில் கூட கத்திப் பட போஸ்டர்கள் ஓட்டப்பட்டது . விஜய் ரசிகர்களில் ஒருவரான உன்னி என்பவர் கட் அவுட் மேலே சென்று பால் அபிஷேகம் நடந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது .

இது போன்று உயிரை அழிக்கும் பாலாபிஷேகம் தேவைதானா ?? ரசிகர்கள் யோசிக்கவும் ...

பதக்கம் வேண்டாம் என்று புறக்கணித்த சரிதா தேவிக்கு தடை விதிக்கப்பட்டது !!


 நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் விதமாக தனக்கு அளிக்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்தார் . அதனை தன்னுடன் மோதிய சக வீராங்கனையிடம் ஒப்படைத்து விட்டார் . பின்னர் ஒரு நாள் கழித்து அவர் இது குறித்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பிடம் மன்னிப்பு கேட்டார் .

ஆனால் சர்வதேச பாக்சிங் அமைப்பு இவரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடை செய்துள்ளது . அவர்கள் தெரிவிக்கும் வரை இவரால் பங்கு கொள்ள முடியாது . இவருடைய பயிற்சியாளர்களையும் தடை செய்துள்ளனர் . இதனால் இவரால் அடுத்த மாதம் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியாது .

இது குறித்து சரிதாவின் கணவர் கூறுகையில் நாங்கள் பதில் கடிதம் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம் . இந்த பிரச்சனை விரைவில் முடிவுபெறும் என்று தெரிகிறது  என்றார் .

உணவே மருந்து : முருங்கைக் கீரை



முருங்கைக் கீரை என்ன சத்து?
தண்ணீர் : 63.8%
புரதம் : 6.1%
கொழுப்பு : 10%
தாதுஉப்புக்கள் : 4%
நார்ச்சத்து : 6.4%
மாவுச்சத்து : 18.7%
வைட்டமின் ஏ : 11300/IU
வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம்
(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு)
சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம்
குளோரின் : 423 மில்லி கிராம்
இரும்புச் சத்து : 259 மில்லி கிராம்
ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம்
கந்தகச் சத்து : 137 மில்லி கிராம்
மாங்கனீஸ் : 110 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் வைட்டமின் சி : 220 மில்லி கிராம் 

முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் உள்ளன‌.


பலன்கள் :
முருங்கைக் கீரை 108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது. கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும். வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன. முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.  கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

இயற்கை மருத்துவம் : தலைமுடி பராமரிப்பு


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர: கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக: நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக: ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற: அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற: மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க: தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர: நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய: நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media