முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி 4 வருட சிறை தண்டனையுடன் சிறையில் அடைத்து உள்ளார்கள். இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று கேபிள் டிவி நிறுவனம் போராட்டம் நடத்தியது. இன்று தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஒடவில்லை. இந்நிலையில் 7 ஆம் தேதி போராட்டத்தில் இறங்குவதாக தனியார் பள்ளிகள் அறிவித்து உள்ளன.
இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது. போராட்டத்தில் இறங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் நலனுக்காக போராட்டத்தில் இறங்கலாம், ஒரு பொது நலனுக்காக போராட்டத்தில் இறங்கலாம். ஆனால் எந்த நலனும் இல்லாமல் ஒரு ஊழல் குற்றவாளியை தண்டித்ததற்காக போராட்டத்தில் இறங்குவது என்பது முட்டாள்தனமான செயல் ஆகும். இது ஊழல் தொடர்பான கண்ணோட்டத்தில் மாணவர்களின் மனதை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஊழல் செய்வது தவறில்லை என்று கூட அவர்கள் எண்ணுவார்கள்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்பினரையும் மிரட்டி போராட்டத்தில் ஈடுபட சொல்லி ஆளும் கட்சியினர் கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு உடனடியாக இந்த் விவகாரத்தில் தலையிட வேண்டும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.