இந்தியா - மியான்மர் எல்லையில் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்துதில் இணைந்து செயல்பட இரு தரப்பு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதுதொடர்பாக, இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளிடையே மியான்மரில் நான்யான் பகுதியில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அருணாசலப் பிரதேசத்தின் சங்லாங் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சாஞ்சல் யாதவ் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய-மியான்மர் எல்லையில் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள், ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் ஆகியவை குறித்து உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர்.
எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நாகலாந்து தேசியவாத சோஷலிஷ குழுக்கள் அதிக பலம் பெற்று வருவதாகவும், உல்ஃபா பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் அவற்றின் நடவடிக்கைகள் பெருகி வருவதாகவும் மியான்மர் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்த இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மியான்மரிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்படும் தொய்வினைத் தடுக்கும் வகையில் சாலைப் போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.