நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம். இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிது. சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பைக்கு டாடா காட்டிவிடலாம். ஏனெனில் இப்பழத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் இரத்ததில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி சிக்கென்று உடலை வைத்துக்கொள்ள உதவி புரிகிறது.
உயர் இரத்த அழுத்தம் தடுக்க : நீல மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் பழங்கள் அனைத்திலும் அந்தோசியனின்கள் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது. புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134000 பெண்கள் மற்றும் 23000 ஆண்கள் சோதனைக்கு உட்படுத்தபட்டனர். அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப்பட்டது. அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.