BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 26 August 2013

மைனர் பெண்களுடன் செக்ஸ் உறவு குற்றமல்ல, சர்ச்சையை கிளப்பியிருக்கும் நீதிமன்ற தீர்ப்பு - மக்கள் அலசல்

சம்மதத்துடன் மைனர் பெண்களுடன் செக்ஸ் உறவு குற்றமல்ல, சர்ச்சையை கிளப்பியிருக்கும் நீதிமன்ற தீர்ப்பு - மக்கள் அலசல்


சமீபத்தில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் டெல்லி காவல்துறையும் சேர்ந்து ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது, அதில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் உறவு வைத்து கொள்வது சட்ட விரோதம் என சட்ட திருத்தம் வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்கள்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் அவர்கள் சம்மதத்துடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகாவது, அதை குற்றமாக பதிவு செய்வது தனிமனித உரிமையை பறிப்பதாகவும், 18 வயது வரை அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என வளர்ப்பு பிராணியை போல் வளர்க்க முடியாது, அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று மனுவை  தள்ளுபடி செய்து விட்டார்.

அதற்கு அவர் சில உதாரணங்களையும் காட்டியுள்ளார், 15 வயது பெண்ணுடன் உறவு கொண்ட ஒருவன் பின்பு அந்த பெண்ணையே மணந்து கொண்டான், இந்த சட்ட திருத்ததினால் அவனை சிறையில் அடைக்க வேண்டியிருக்கும், பின் அந்த பெண்ணின் நிலை குறித்து யோசிக்க வேண்டும். பாதுக்காப்பான உறவு மற்றும் உடறவின் விளைவுகள் குறித்து சிறுவயதினருக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டியது காவல்துறை மற்றும் சமூகத்தின் கடமை என்று சொல்லியுள்ளார்.

இத்தீர்ப்பிற்கு பரவலாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்டம் எதை உறவு கொள்ள பெண் சம்மதிக்கிறாள் என்கிறது?
18 வயது நிரம்பிய பெண்களே ஒரு நிலையான மனநிலையில் இல்லாத நிலை உள்ளது என்றும் அவர்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறி ஒரு பெண்களுக்கான திருமண வயதான 18ஐயே 21 ஆக மாற்ற கோரிக்கை எழுப்புகிறார்கள் சிலர்,  இந்நிலையில் சிறுவயது பெண்ணை ஒருவன் ஐஸ்கிரீம் வாங்கி தர்றேன், நான் சொல்ற மாதிரி கேக்குறியா என ஏமாற்றி உறவு கொள்ளலாம், டீன் ஏஜ் பெண்களை ஆசை வார்த்தைகளை கூறியோ, இதெல்லாம் தப்பில்லை என்று மூளைச்சலவை செய்து செக்ஸ் உறவை அந்த பெண்ணின் சம்மதத்துடனே கொள்ளலாம், இதற்கு பெண்ணும் ஒத்துழைக்கலாம், அந்த வயது செக்ஸ் உறவு கொள்வது  அதன் பின் விளைவுகள், டீன் ஏஜ் கர்ப்பம், இதெல்லாம் என்னவென்றே தெரியாமல் குழந்தைகள் இத்தீர்ப்பினால் பாழாகும் , கண்டிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுடன் செக்ஸ் உறவுகொள்பவர்கள் என்பதை குற்றமாக சட்ட திருத்தம் வேண்டும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர்.

வளர்ந்த நாடுகளான சிங்கப்பூரில் பாலியல் தொழில் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, ஆனால் 18 வயதிற்கு கீழ் அதற்கு அனுமதியில்லை அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டது என்பதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். ஒருமுறை 17 வயது பெண் பாலியல் தொழிலாளியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அப்பெண்ணிடம் உறவு கொண்ட 80 பேர் கைது செய்யபட்டு சிறையில் இருக்கின்றனர். அதில் சமூகத்தில் பெரும் பதவிகள் வகித்தவர்கள், பெரும் கோடிஸ்வரர்களும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுப‌வித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.


நீதிபதிகள் கூறியது போல 18 வயதுக்கு கீழ் உடலுறவு கொள்வது மைனர்களின் தனிமனித சுதந்திரமா? இந்த தீர்ப்பு சரியா? தவறா? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media