BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 18 August 2013

தலைவாவின் தடை நீங்கியது...

தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தலைவா படம் வெளியிட தயாராகிவிட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கபட்ட தலைவா படம், தியேட்டர்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் வெளியிடப்படாமல் தடைபட்டது, மேலும் படத்திற்கு கேளிக்கை வரி சலுகை ரத்து செய்யபட்டதாலும் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட தயங்கினர்.

இதுகுறித்து பேச நடிகர் விஜய் தரப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கோரியபோது அனுமதி வழங்கப்படவில்லை. தொலைகாட்சி பேட்டியில் அம்மா அவர்களின் நல்லாட்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, எனது படம் விரைவில் வெளிவரும் என அறீவித்தபோதும் ரிலீஸ் குறித்து எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது, இறுதியில் விஜய் தரப்பு சட்டரீதியாக அணுகலாம் என முடிவெடுத்தது.

தயாரிப்பாளர் தரப்பு தமிழக மக்களின் கவனத்தை கவரும் வகையில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரியது, உங்களுக்கும் திரைரங்கு உரிமையாளர்களுக்கும் உள்ள பிரச்சனை அதற்கு காவல்துறை தலையிட முடியாது என காவல்துறை அனுமதி மறுத்தது. அதை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு உயர் அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

பரவலான அரசியல் பார்வை தலைவா படத்தின் மேல் குவிந்ததும் முன்னால் முதல்வர் கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தடையை நீக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். தி.மு.க எம்.எல்.ஏ வும், சினிமா ஜெ.அன்பழகன் தமிழகம் முழுக்க தலைவா படத்தை வெளியிட நான் தயார் என அறிவித்தார், இப்படத்தில் உரிமம் வேங்கிருந்த வேந்தர் மூவிஸுக்கு இது மேலும் தைரியத்தை வரவழைத்தது.

இதை தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் தலைவா படம் தயாரிப்பு தரப்பு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பேசியது, பேச்சுவார்த்தையின் முடிவில் தலைவா படம் சென்னையில் வரும் 20 ஆம் தேதியும், மற்ற மாவட்டங்களில் 21 ஆம் தேதியும் வெளியிடப்படும் என முடிவு செய்யபட்டது.

இன்று மதியத்தில் இருந்து இப்படத்திற்கு ரிசர்வேஷன் தொடங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media