BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 August 2013

மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - ராமதாஸ்

ஜான் ஆபிரஹாம் தயாரித்து நடித்துள்ள இந்திப்படம், இது இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்போரட்டத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் வரும் 23 ஆம் தேதி தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடபடும் என அறிக்கை வெளியாகியிருந்தது, உங்கள் படத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான காட்சிகள் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதே என்ற கேள்விக்கு நாங்கள் விடுதலை புலிகளை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என்ற மழுப்பலான பதிலே படக்குழுவினரிடம் இருந்து வந்துள்ளது.

இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் இலங்கையில் எடுக்கபட்டும்,  இப்படம் எடுப்பதற்கான நிதி உதவி இலங்கை அரசால் மறைமுகமாக கொடுக்கப்படுள்ளது எனவும், இப்படம் இலங்கை அரசை நல்லவர்களாக காட்டும் ஆவண படம் போல் இருப்பதால் இதற்கு இலங்கை அதிபர் ராஜ பக்‌ஷே ஆதரவு அளித்திருப்பாதகவும் தெரிகிறது.

வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் காமென்வெல்த் மாநாடு இம்முறை இலங்கையில் நடக்க இருக்கிறது, அவ்வாறு நடக்கும் பட்சத்தில் காமென் வெல்த் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு இலங்கை இரண்டு வருடங்களுக்கு தலைமை தாங்கும் எனவும் தெரிகிறது. இது இலங்கை அரசின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் குற்றசாட்டை மறைக்க உதவலாம் என்பதால் தமிழர் தலைவர்கள் பலர் இம்மாநாடு இலங்கையில் நடக்கக்கூடாது எனவும், இலங்கையும் புறக்கணிக்க வேண்டும் எனவும் தெவித்து வருகின்றனர்.

கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாலும் ஒரு நாட்டின் விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் எடுக்கபட்ட படமான மெட்ராஸ் கஃபே படத்தை தடை விதிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸும் வேண்டுகோள் விடுத்துள்ளார்!




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media