டில்லியில் 15வயது பெண் கடத்தி கற்பழிப்பு மீண்டும் அரங்கேறும் கற்பழிப்பு கொடூரங்கள்
ஒருவர் கைது, இருவர் தலைமறைவு, பெற்றோர்களும், பெண்களும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று பாடம் சொல்லும் சம்பவம் இது.
டில்லியில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அந்த கொடூரம் நடந்தது, ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு பின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி இறந்தார், அந்த கொடூரம் மக்களை உலுப்பியது பெரும் போராட்டங்கள் நடந்தன.
சில நாட்களுக்கு முன் 22 வயது பத்திரிக்கை போட்டோகிராபர் கொடூரமாக 5 பேர் கொண்ட கும்பல் மும்பையில் கற்பழித்தது அதிர்ச்சியை அளித்ததென்றால் தற்போது மீண்டும் தலைநகரில் வந்துள்ள செய்தி இந்த கொடுமைகளுக்கு முடிவே இல்லையா என்று அயர்ச்சியளிக்கிறது.
15 வயது நிரம்பிய சிறுமி தனது சகோதரி குழந்தை பெற்று மருத்துவமனையில் இருந்தவருக்கு உதவியாக சப்தர்ஜிங் மருத்துவமனையில் இருந்துள்ளார், மூன்று நாட்கள் சகோதரிக்கு உதவிய பின் வீடு திரும்ப மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவர் வீடு திரும்பும் வழியை மறந்துள்ளார், அவருக்கு உதவுவதாக வந்த ஒருவன் அந்த பெண்ணை கடத்திக்கொண்டு போய் சத்பூர் பகுதியில் வைத்து கற்பழித்துள்ளான், சத்பூர் பகுதியில் அவனுக்கு உதவியாக மேலும் இருவர் இருந்துள்ளனர்.
ஒரு ஆட்டோவில் ஏற்றி மீண்டும் சப்தர்ஜிங் மருத்துவமனையிலே விட்டுள்ளனர், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தன் பெற்றோரிடம் கூற அவர்கள் காவல்துறையை அணுகினர், மருத்துவமனை காவலாளி அடையாளம் காட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான், அவனுக்கு உதவிய இருவர்களை போலிஸ் தேடுகிறது.
கற்பழிப்புகளை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதே சமயம் இளம் பெண்களும் அறியாத நபர்களிடம் மிக கவனமாக இருக்க வேண்டும், பெற்றோர்களும் பெண்களை தனியாக வெளியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.