BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 24 August 2013

ஆறுமாதத்தில் 4135 சாவு - டெல்லி மருத்துவமனை



இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்று டெல்லியில் உள்ள சடர்ஜங் மருத்துவமனை, இங்கே கடந்த ஆறுமாதத்தில் மட்டும் 4135 உள்பிரிவு நோயாளிகள் இறந்துள்ளதாக நேற்று மக்களவை கேள்வி நேரத்தில் எதிர்கட்சியினர் கேட்டனர்.

இதே மருத்துவமனையில் சென்ற வருடம் மட்டும் 8239 உள்பிரிவு நோயாளிகள் இறந்துள்ளனர், கிட்டதட்ட ஒருநாளுக்கு 22 நோயாளிகள், இது எம்ய்ஸ் மருத்துவமனையை விட இரு மடங்காகும். எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்ற வருடம் இறந்த உட்பிரிவு நோயாளிகள் 4423 பேர்.

மருத்துவமனை தரப்பு இதற்கு பதில் சொல்கையில், எங்கள் மருத்துவமனையில் 1530 படுக்கைகள் இருக்கின்றன ஆனால் உட்பிரிவு நோயாளிகள் 2000 பேர் இருக்கிறார்கள், அதற்கு மேலும் தினம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தங்கிருக்கும் நோயாளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோட் மோசமான விபத்தை சந்தித்தவர்கள், தீக்காயம் பட்டவர்கள், தலையில் அடிப்பட்டவர்கள் என அவசரபிரிவில் வைக்க வேண்டியவர்கள்.

அவசரபிரிவிலோ மொத்தம் இருபது படுக்கைகள் மட்டுமே உள்ளன, பன்றி காய்ச்சல் என்னும் ஸ்வைன்ப்ளு காய்ச்சலுக்கும் இங்கேயே தான் படுக்கை. இது குறித்து மருத்துவமனை தரப்பு அரசுக்கு தெரிவித்து விட்டது என்கிறது. 2009 ஆம் ஆண்டு சீரமைத்தபின் இப்போது வரை மறுசீரமைப்பிற்கு உத்தரவு வரவில்லை.

மக்களைவில் இதற்கு பதிலளித்த ஆளும்தரப்பு அமைச்சர், இந்த மருத்துவமனைக்காக இரண்டு புதிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கியிருப்பதாகவும், அதில் சிறப்பு கட்டண பிரிவில் 807 படுக்கைகளும் அதில் 500 படுக்கை சிறப்பு சிகிச்சை பிரிவாகவும்ச் எயல்படும் என கூறினார். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1332 கோடியாகும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media