BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 24 August 2013

மெட்ராஸ் கபே திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் தனியாக தன் குழந்தைகளுடன் போராடிய மறத்தமிழன் அப்துல் காதர்

மெட்ராஸ் கபே திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் தனியாக தன் குழந்தைகளுடன் போராடிய மறத்தமிழன் அப்துல் காதர்


அப்துல் காதர் எனும் தமிழர் ஐதராபத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி. இவர் ஒரு சிறந்த தமிழ் உணர்வாளர். தமிழகத்தில் மாணவர் போராட்டம் நடக்கும் போது இவர் தன்னுடைய குழந்தைகள், மனைவி, அம்மா , அப்பா என அனைவருடன் ஐதராபாத்தில் நடந்த உண்ணா நிலை போராட்டத்தில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் ஐதராபத்தில் இருந்து சென்னை வந்து கலந்து கொண்டுள்ளார். அணு உலை போராட்டங்கள், ஈழத் தமிழர் போராட்டங்கள் என தமிழர் நலம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்வார்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு எதிரான மெட்ராஸ் கபே திரையிடப்படுகிறது என்று அறிந்தவுடன் தான் வசிக்கும் ஐதராபாத் நகரிலும் திரையரங்கம் முன்னே ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என எண்ணினார். அதற்காக பல தமிழர்களையும் அழைத்தார். ஆனால் அங்கு இருந்து வெகு சில உணர்வாளர்களும் வெளி ஊர் சென்று விட்டதால் யாராலும் வர இயலவில்லை. எனினும் இவருடைய போராட்ட எண்ணம் மாறவில்லை. காலை 11 மணிக்கு படம் தொடங்கப்பட இருக்கிறது என்பதை அறிந்து 10.30 மணிக்கு தானும் தன் இரு பிள்ளைகளையும் ( 10 வயது பெண் பிள்ளை 8 வயது ஆண் பிள்ளை ) அழைத்துக் கொண்டு திரையரங்க வாசலில் பதாகைகள் பிடித்து நின்று கொண்டார். மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக அரை மணி நேரம் அனைவரும் முழக்கமிட்டனர். இதை பார்த்து சுமார் பல நூறு பேர்கள் அங்கு கூடி விட்டனர்.

இது குறித்து அப்துல் காதர் மேலும் கூறுகையில்...

எங்களால் முடிந்தது தனியாக இன்று போராட்டத்தை எடுத்துச் சென்றோம் ! பொதுமக்கள் ஆதரவு இருந்தது ஒரு போக்குவரத்து துறை காவலர் உதவிகள் செய்தார் பொதுமக்கள் கூடியவுடன் அவர்களிடம் இந்தியா இலங்கை கூட்டுப்படுகொலைகளை பற்றியும் தமிழர்கள் எதற்காக இப்படத்தை எதிர்க்கிறோம் என்று பரப்புரை செய்தேன். அந்த நேரத்தில் அங்கு வந்த சுல்தான் பஜார் காவல்நிலைய ஆய்வாளர் வந்து என்னவென்று கேட்டார் உனக்கு எந்த ஊர் என்று கேட்டார் . ஏன் இங்கு வந்து போராடுகிறீர்கள் என்று கேட்டார் வந்திருந்த கூட்டம் மொத்தமும் தமிழர்கள் என்று நினைத்தார். நான் மட்டும் தான் என்றவுடன் காவல் வண்டியில் ஏறச் சொன்னார். குழந்தைகளை கண்டதும் எங்களது கைகளில் இருந்த விளக்க பதாகைகளை பறித்துவிட்டு இங்கே நிற்க கூடாது என்று சப்தமிட்டு போக சொன்னார். அவர் பெயர் ஆனந்த். எங்கள் கடமையை நாங்கள் செய்துவிட்டோம் என்று நிறைவு கொள்கிறோம். குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு செய்தியை கொண்டு சேர்த்துவிட்டோம் என்றார் அப்துல் காதர்.

இவ்வாறு இன உணர்வுடன் தமிழர்களின் உரிமைக்காக , தமிழரின் நலனுக்காக தன்னுடைய குழந்தைகளுடன் வீதிக்கு வந்த வீரத் தமிழர் அப்துல் காதரை தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்ட வேண்டும். அனைவரும் இவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவியுங்கள் 08686228339. இவரை போலவே ஒவ்வொரு தமிழனும் இன உணர்வு கொண்டால் தமிழர்கள் நமது போராட்டங்களில் நிச்சயம் வெற்றி பெறலாம்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media