தங்கமீன்கள் FIR
கற்றது தமிழ் கொடுத்த எதிர்பார்ப்பில் இயக்குனர் ராம் இன் தங்கமீன்கள் இன்று வெளியாகியுள்ளது, கதை என்றால் ட்ரெயிலரில் காண்பிக்கப்பட்ட அதே அப்பா - பொண்ணு பாசம் தான், வேறொன்றும் ஸ்பெசல் இல்லை, ஆனால் திரைக்கதையில் ஸ்பெசல் உள்ளது.
பெண்ணின் ஸ்கூல் பீஸ் கட்ட கூட சிரமப்படும் தந்தை பெண்ணுக்காக என்ன வேலைகள் எல்லாம் செய்கிறார், ஊர் விட்டு ஊர் போயெல்லாம் வேலை செய்கிறார் என்பதையும் பெண் ஆசையாய் கேட்ட பொருளை வாங்கித்தர எத்தனை சிரமப்படுகிறார் என்பதும் தான் கதை. இயக்குனர் ராமின் கைவண்ணத்தில் நடிகர் ராம் வாழ்ந்ததில் படம் சிறப்பாக வந்துள்ளது.
குழந்தைக்காக கேரளா சென்று சம்பாதிக்க கிளம்பும் ராம் தன் பிறந்த நாள் பரிசாக வோடோபோன் விளம்பரத்தில் வரும் பக் ரக நாய்க்குட்டியை தன் பிறந்த நாள் பரிசாக வாங்கி வரவேண்டும் என்று கோருகிறார், அப்பாவும் வரவில்லை, நாய்குட்டியும் வரவில்லை என்ற நிலையில் தங்கமீனாக மாறிப்போக குழந்தை நினைக்கிறார்.
தங்கமீன்கள் என்று குழந்தைகள் உலகத்தில் குறிப்பிடப்படுவது எது என்பதில் தான் சுவாரசியம் அடங்கியுள்ளது, குழந்தை ஆசைப்பட்ட பொருளை அப்பா ஏமாற்றாமல் வாங்கி தந்தாரா? குழந்தை தங்கமீனாக மாறுகிறாளா? என்பது கடைசி நிமிடங்களில் படத்தில் பரபரப்பை கூட்டுகிறது.
சினிமா விரும்பிகள், மாற்று சினிமா ஆதரவாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும், அதே சமயம் படத்தின் மேல் அதீத எதிர்பார்ப்புகளுடன் சென்றால் கொஞ்சம் ஏமாற்றம் மிஞ்சும்.
"குழந்தைகளுக்கு மட்டுமல்ல. குழந்தைகளின் கல்விக்காக பீஸ் கட்டியே நொந்து நூல் நூலாய்ப் போன ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கமீன்களைப் பிடிக்கும்" என்று எழுத்தாளர் பாமரன் குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பெண்கள் 3.5 / 5

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.