இசை அமைப்பாளர், டிவி தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தீவிரவாதியை போல கைது - லண்டனிலிருந்து நீண்ட மலையாள லாபியின் கைகள்.
கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால் பாடலை முணு முணுக்காத ஆட்களே இருக்காது, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைப்பாளராக சுப்ரமணியபுரம், ஈசன், பசங்க உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார், அது மட்டுமின்றி இயக்குனர் சசிக்குமார் உட்பட பல இளைஞர்களுக்கு சினிமா துறையில் சிறந்த வழிகாட்டியாகவும் இருந்துள்ளார், தற்போது அழகு தமிழில் வார்த்தை விளையாட்டு என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் நடத்தி வருகிறார். நீண்ட காலமாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இசை அமைப்பாளராகவும் உள்ள ஒரு பிரபலம் இவர்.
இவரைத்தான் ஒரு தீவிரவாதியை கைது செய்வது போல 40க்கும் மேற்பட்ட போலிஸ்காரர்கள் உள்ளே புகுந்து கைது செய்துள்ளனர், அது மட்டுமின்றி இவரை மீடியாவுடன் பேசவே அனுமதிக்கவில்லை. இவரை போன்ற பிரபலங்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதர்களுக்கு என்ன தான் நிலை? அப்படி என்ன குற்றம் செய்தார் ஜேம்ஸ் வசந்தன் என்றால் ஜேம்ஸ் வசந்தன் மீது ஒரு புகாரை தந்துள்ளார் அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராதா வேணுபிரசாத் (65) என்ற மலையாள பெண்மணி சனிக்கிழமை தன்னை ஜேம்ஸ் வசந்தன் ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
என்ன வழக்கு என்று கூட சொல்லாமல் தம்மை கைது செய்ததாக ஜேம்ஸ் வசந்தன் செய்தியாளர்களிடம் கூறினார், மேலும் சென்னை போலிஸ் கமிஷனருக்கு இந்த பெண்மணி வேண்டப்பட்டவர் என்பதால் எளிதாக வழக்கு பதிவு செய்து தன்னை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். ஜேம்ஸ் வசந்தன் வசிக்கும் இடத்தை அருகில் உள்ள பெண்மணி விலைக்கு கேட்டதாகவும் தான் அதை தர மறுத்ததால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார், இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்
ஜேம்ஸ் வசந்தன் மற்றும் அந்த பெண்மணிக்கு இடையேயான இடம் குறித்து வழக்கு கோர்டில் 3 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஜேம்ஸ் வசந்தன் தனது இடத்தில் கட்டிட வேலைகள் மேற்கொண்டதிலிருந்து தகராறு அதிகரித்துள்ளது, பில்டிங்கிலிருந்து தூசி கிளம்புகிறது என்றும் ஆஸ்த்மா பேஷண்டான தனக்கு தொந்தரவாக உள்ளது என்றும் அப்பெண்மணி புகார் அளித்துள்ளார், இது குறித்தும் போலிஸ் தலையிட்டு சமாதானம் செய்துள்ளது, ஜேம்ஸ் வசந்தனும் சில பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு மூடியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் மீது புகார் அளித்த பெண்மணியின் மகன் ஒருவர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உயர் அதிகாரியாக உள்ளார் என்றும் இடப்பிரச்சினையில் ஜேம்ஸ் வசந்தனுக்கும் இந்த பெண்மணிக்கும் நீண்ட நாட்களாக வாக்குவாதம் இருந்ததும் தெரியவந்துள்ளது, இந்நிலையில் இலண்டனில் உள்ள அவர் தன் மலையாள தொடர்புகளை பயன்படுத்தி இங்கிருக்கும் உயர் அதிகாரியோடு பேசி இந்த மிரட்டல் கைதை செய்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
ஜேம்ஸ் வசந்தன் சினிமா துறையிலும் ஊடக துறையிலும் டீசண்டான ஆள் என்று பெயர் வாங்கியவர், இப்படி பட்ட ஒரு பிரபலத்தை ஆபாசமாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் சரியான விசாரணைகள் எதுவுமின்றி தீவிரவாதியை போல கைது செய்வதும் அவரை செய்தியாளர்களிடம் கூட பேச விடாமல் செய்ய முடியவும் ஒரு வெளிமாநில லாபியால் செய்ய முடியுமென்றால் அது தமிழகத்தில் மட்டுமே இயலும்.
கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால் பாடலை முணு முணுக்காத ஆட்களே இருக்காது, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைப்பாளராக சுப்ரமணியபுரம், ஈசன், பசங்க உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார், அது மட்டுமின்றி இயக்குனர் சசிக்குமார் உட்பட பல இளைஞர்களுக்கு சினிமா துறையில் சிறந்த வழிகாட்டியாகவும் இருந்துள்ளார், தற்போது அழகு தமிழில் வார்த்தை விளையாட்டு என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் நடத்தி வருகிறார். நீண்ட காலமாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இசை அமைப்பாளராகவும் உள்ள ஒரு பிரபலம் இவர்.
இவரைத்தான் ஒரு தீவிரவாதியை கைது செய்வது போல 40க்கும் மேற்பட்ட போலிஸ்காரர்கள் உள்ளே புகுந்து கைது செய்துள்ளனர், அது மட்டுமின்றி இவரை மீடியாவுடன் பேசவே அனுமதிக்கவில்லை. இவரை போன்ற பிரபலங்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதர்களுக்கு என்ன தான் நிலை? அப்படி என்ன குற்றம் செய்தார் ஜேம்ஸ் வசந்தன் என்றால் ஜேம்ஸ் வசந்தன் மீது ஒரு புகாரை தந்துள்ளார் அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராதா வேணுபிரசாத் (65) என்ற மலையாள பெண்மணி சனிக்கிழமை தன்னை ஜேம்ஸ் வசந்தன் ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
என்ன வழக்கு என்று கூட சொல்லாமல் தம்மை கைது செய்ததாக ஜேம்ஸ் வசந்தன் செய்தியாளர்களிடம் கூறினார், மேலும் சென்னை போலிஸ் கமிஷனருக்கு இந்த பெண்மணி வேண்டப்பட்டவர் என்பதால் எளிதாக வழக்கு பதிவு செய்து தன்னை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். ஜேம்ஸ் வசந்தன் வசிக்கும் இடத்தை அருகில் உள்ள பெண்மணி விலைக்கு கேட்டதாகவும் தான் அதை தர மறுத்ததால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார், இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்
ஜேம்ஸ் வசந்தன் மற்றும் அந்த பெண்மணிக்கு இடையேயான இடம் குறித்து வழக்கு கோர்டில் 3 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஜேம்ஸ் வசந்தன் தனது இடத்தில் கட்டிட வேலைகள் மேற்கொண்டதிலிருந்து தகராறு அதிகரித்துள்ளது, பில்டிங்கிலிருந்து தூசி கிளம்புகிறது என்றும் ஆஸ்த்மா பேஷண்டான தனக்கு தொந்தரவாக உள்ளது என்றும் அப்பெண்மணி புகார் அளித்துள்ளார், இது குறித்தும் போலிஸ் தலையிட்டு சமாதானம் செய்துள்ளது, ஜேம்ஸ் வசந்தனும் சில பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு மூடியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் சினிமா துறையிலும் ஊடக துறையிலும் டீசண்டான ஆள் என்று பெயர் வாங்கியவர், இப்படி பட்ட ஒரு பிரபலத்தை ஆபாசமாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் சரியான விசாரணைகள் எதுவுமின்றி தீவிரவாதியை போல கைது செய்வதும் அவரை செய்தியாளர்களிடம் கூட பேச விடாமல் செய்ய முடியவும் ஒரு வெளிமாநில லாபியால் செய்ய முடியுமென்றால் அது தமிழகத்தில் மட்டுமே இயலும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.