BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 7 August 2013

விவி மினரல்ஸ்... கலெக்டரை தூக்கி அடித்த இந்த காலில் செருப்பு அணியாத பவர்ஃபுல் அண்ணாச்சி யார் ?

விவி மினரல்ஸ்... கலெக்டரை தூக்கி அடித்த இந்த காலில் செருப்பு அணியாத பவர்ஃபுல் அண்ணாச்சி யார் ?

விக்ரம் நடித்த சாமி படத்தில் ஒரு சீன் வரும், 8 மாவட்டத்துல் யாரு எம்பி, யாரு எம்.எல்.ஏ, யாரு மந்திரி, யாரு ஆபிசருன்னு கண்ட்ரோல் பண்றோம், ஆனா ஒரு பேப்பர்ல கூட பெருமாள் பிச்சைங்கற பெயர் வெளியில வராது, அப்படித்தான் இந்த அண்ணாச்சி வைகுண்டராஜன் பெயர் பேப்பரில் வந்ததில்லை, கூகிள் சர்ச்சில் அடித்து பாருங்கள், அவர் படங்கள் கூட அதிகமாக கிடைக்காது.

செருப்பு கூட போடாமல் நடக்கும் இந்த அண்ணாச்சி பெயர் முதல் முறையாக சென்ற திமுக ஆட்சியில் தான் பேப்பரில் வந்தது. அதிமுக ஆட்சிக்கு வரும் போது வைகுண்டராஜனுக்கு சுக்கிரன் உச்சத்துக்கு போவதும் திமுக ஆட்சி வந்தால் சனி வக்ரத்துக்கு போவதும் நடைபெறுவது வாடிக்கை...

அண்ணாச்சி முதலில் கார்ணெட் மணலை மூட்டையில் அடைத்து அதை தூக்கி சுமந்து லோடு ஏற்றும் கூலி வேலையை தான் செய்தார், கார்னெட் மணல் என்பது வெறும் மணல் அல்ல அது பொன் முட்டையிடும் வாத்து என்று கண்டு கொண்ட அண்ணாச்சி அந்த காண்ட்ராக்ட்டை தானே எடுத்து தன் தம்பிகளை கொண்டு தானே மூட்டை சுமந்து ஆரம்பித்த நிறுவனம் தான் வீவீ மினரல்ஸ், தன்னுடைய அனைத்து ஜெகஜ்ஜால வித்தைகளையும் காண்பித்து நிறுவனத்தையும் உயர்த்த ஆரம்பித்தார், நேர்மையாக ஏற்றுமதி செய்து பெரிய ஆளாகிவிடமுடியுமா என்ன? கிராணைட் கல்லில் என்றால் கார்ணெட் மணலில் அத்தனை முறைகேடுகள்.

அதிமுக பெரிய தலை தொடர்புகள் அவரை உச்சத்துக்கு கொண்டு போயின, ஜேஜே டிவி ஆரம்பித்த போது அதற்கு பெரிய அளவில் நிதி உதவி செய்து அதன் முதலீட்டாளர்களில் ஒருவராகவும் கூட இருந்தார். ஆனால் எங்கேயும் தன்னை முன்னிறுத்தி பேப்பரில் பேர் வரும் அலப்பறைகளை செய்ததில்லை.

எத்தனையோ கார்கள் அணி வகுத்தாலும் காலில் செருப்பு கூட அணியாதவர் இந்த அண்ணாச்சி, கேட்டால் நான் செருப்பு கூட இல்லாமல் கஷ்டப்பட்டவன் அதனால் தான் அதை மறக்க கூடாது என்பதால் செருப்பு அணிவதில்லை என்றார்.  அண்ணாச்சி அதிமுகவின் கேஷ் பாக்ஸ் என்றால் திமுக சும்மா இருக்குமா? சென்ற முறை ஆட்சிக்கு வந்த திமுக முதலில் விரட்டியது வீவீ மினரலஸ் அண்ணாச்சியை தான், ஓடி ஒளிந்த அண்ணாச்சியை ஒசாமா ரேஞ்சுக்கு என்கவுண்டர் போட்டுவிடுவோம் என்று மிரட்டியது, அவரது சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்படும் என்று அலற வைத்தது, கடைசியாக சரணடைந்த அண்ணாச்சி அதன் பிறகு அமைதியாக இருந்தார், அப்போது தான் முதன் முறையாக அண்ணாச்சி பெயர் வெளி உலகில் பத்திரிக்கைகளில் வந்தது. கைதுக்கு பிறகு என்ன நடந்ததோ திமுகவும் அண்ணாச்சியை அமைதியாக விட்டது.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது அண்ணாச்சியும் பவர் ஆனார். சிவந்தி ஆதித்தன் குடும்பத்தின் கண்ட்ரோலில் இருந்த தெஷ்ணமாற நாடார் சங்கத்தை ஆளுங்கட்சியின் ஆசியுடன் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தார், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தொழில் பேட்டைகள், சமுதாயக் கூடங்கள் எனக் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் இந்த அமைப்புக்கு உள்ளன.

தற்போது சட்டவிரோதமாக கார்ணெட் மணல் அள்ளியதாக வீவீ மினரல்ஸ் மீது ரெய்டு நடத்திய 24 மணி நேரத்தில் தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஸ்குமார் வேறு பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media