வெடிகுண்டு மிரட்டல் உண்மையா? விஜய்யின் தலைவா படம் வெளியாவதில் நெருக்கடி - எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் ஆசை கிளப்பிவிடும் எதிர்ப்புகள்.
காவலன் திரைப்படத்தின் பின்னணியில் இருந்த அரசியலை போலவே விஜய்யின் தலைவா படம் வெளியாவதற்கு விழும் தடைகளின் பின்னாலும் அரசியல் உள்ளது என தெரிய வந்துள்ளது. அப்போது பின்னணியில் தடை போட்டது திமுகவும் மாறன் பிரதர்ஸ்ம் என்றால் இப்போது தடை போடுவது அதிமுக.
விஜய்க்கு இருக்கும் அரசியல் ஆசையை விட அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அரசியல் ஆசை கொடி கட்டி பறக்கிறது, சென்ற தேர்தலிலேயே விஜய் ரசிகர் மன்றம் சார்பில் அதிமுகவில் கூட்டணி என்று கூறி போய் சீட்டெல்லாம் கேட்டார், கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக போயஸ் கார்டனிலிருந்து விரட்டப்பட்டார்.
கொழுந்து விட்டெறிந்த எஸ்.ஏ.சியின் அரசியல் ஆசை அடங்காமல் தொடர்கிறது, இந்நிலையில் தலைவா படம் முழுக்க அரசியல் படமாகவும் ஏகப்பட்ட பஞ்ச் களுடன் கடைசியில் ஆட்சியை பிடிப்பது போன்று உள்ளதாம், படமும் கரண்ட் அரசியல் வைத்து நன்றாக வந்துள்ளதால் கடுப்பு ஏறிய ஆளும் வட்டாரம் சென்ற முறை திமுக வை போலவே ஒரு நெருக்குதலை கொடுக்க முன்வந்துள்ளது.
தியேட்டர்களின் மொத்த வசூலுமே முதல் வாரம் மட்டுமே என்பதும், படம் எப்படி இருந்தாலும் முதல் மூன்று நாள் புக்கிங்கை நம்பியே தியேட்டர்களும் பெரும்பணம் கொடுத்து படத்தை வெளியிடுகின்றன, இதை காலிசெய்யும் நோக்கிலேயே ஐநாக்ஸ் தியேட்டடுக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்தது.அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது, இது குறித்து போலிஸில் புகார் அளிக்கப்பட்டது, இதே போன்று மேலும் பல தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள 9 தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தலைவா படத்தின் புக்கிங்கும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் அரசு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இல்லையென்றால் கலெக்சன் நாசமாக போகும் என்பதை உணர்ந்து அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனால் தமிழகமெங்கும் தலைவா படம் வெளியிடுவதில் சிக்கல் நிலவுகிறது. திமுக மற்றும் மாறன் சகோதரர்களை எதிர்த்து காவலன் படம் வெளியிட முனைந்த போது தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட போது அதிமுகவினர் கட்டுப்பாட்டில் உள்ள 100 தியேட்டர்களை தர முன் வந்தார்கள், தற்போது ஆளுங்கட்சியும் எதிர்க்கிறது, ஏற்கனவே திமுகவையும் பகைத்துக்கொண்டாகிவிட்ட நிலையில் தலைவா படமும் விஸ்வரூபம் படம் போல என்ன சமரசத்துக்கும் எத்தனை வெட்டுகளுக்கும் பலியாகப்போகிறதோ?

# விஸ்வரூபம் போல படத்தை ஹிட் ஆக்காம விடமாட்டிங்க போல
பிடித்திருந்தால் இந்த செய்தியை உங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் கூகிள் ப்ளஸ்சில் ஷேர் செய்யுங்கள்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.