BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 26 September 2013

ஏமாற்றப்பட்ட டிடி மருத்துவகல்லூரி மாணவர்கள், கை கொடுக்க மறுக்கும் அரசு

உங்கள் ஆதரவை வேண்டும் ஏமாற்றப்பட்ட டிடி மருத்துவகல்லூரி மாணவர்கள், கை கொடுக்க மறுக்கும் அரசு, டாக்டர் படிப்பு கனவாகிடுமா? போராடும் மாணவர்கள், பெற்றோர்கள். 37வது நாளாக தங்கள் படிப்புக்காக போராடும் மாணவர்கள்.



டாக்டர் படிக்க வேண்டும் என்பதாற்காக +1,+2 இரண்டு ஆண்டுகளுக்கு மாணவர்கள் உயிரை கொடுத்து படிப்பார்கள், மாணவர்கள் கூட சேர்ந்து எத்தனையோ பெற்றோர்களும் இரவெல்லாம் கண் விழித்து, அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு மாணவர்களுடன் சேர்ந்து படிப்பார்கள், சொத்தை விற்றாவது தன் பிள்ளைகளை டாக்டர் படிப்பை படிக்க வைக்கும் பெற்றோர்கள் உண்டு.

டிடி மெடிக்கல் காலேஜ் 2009ல் திருவள்ளூர் மாவட்டத்தில் தீனதயாள் நாயுடு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது, பெண்கள் விடுதிகளில் ரகசிய கேமரா பொருத்தி அவைகளை பார்த்து ரசித்து வந்ததாக எழுந்த புகாரில் தீனதயாள் நாயுடு சிக்கினார், இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது, பின் கடந்த மே மாதம் தீனதயாள் நாயுடு மீது பெங்களூரை சேர்ந்த ஃபர்னிச்சர் வியாபாரியை பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்ததில் தீனதயாள் நாயுடு கைதானார். இந்த கல்லூரியின் சேர்மன் தீனதயாள் நாயுடு பெரிய தில்லாலங்கடி.

2010-11ல் கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்கான எம்சிஐ அனுமதியும் கல்லூரிக்கு கிடைத்திருந்தது, 2011-12ல் கல்லூரியில் மாணவர் சேர்கைக்கு எம்.சி.ஐ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை மறைத்து மாணவர்களை கல்லூரியில் சேர்த்துள்ளார்கள்.

டாக்டர் கனவுடன் கல்லூரியில் சேர்ந்த இந்த மாணவர்கள் தற்போது எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்த மாணவர்களின் எதிர்காலமே இருண்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கையின் போது தீனதயாள் நாயுடு ஒரு தில்லாலங்கடி வேலை செய்துள்ளார், அனைத்து மாணவர்களிடமும் கல்லூரி மாணவர் சேர்க்கை அனுமதிக்கான போலியான தற்காலிக அனுமதி கடிதத்தை காண்பித்துள்ளார் மேலும் மாணவர்களிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்தும் வாங்கியுள்ளார்.

பிரச்சினை வெடித்த உடன் அந்த வெள்ளைபேப்பரில் தங்களுக்கு கல்லூரியில் சேர்க்கையின் போதே எம்.சி.ஐ அனுமதி இல்லையென்று தெரியும் என்றும் அனுமதி நிரந்தரமாக மறுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வோம் என்றும் தாங்கள் எந்த கோரிக்கையும் வைக்க மாட்டோம் என்றும் எழுதி வைத்துக்கொண்டு அதை காண்பிக்கிறார்கள்.

ஏமாற்றப்பட்டதையறிந்த டிடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களை வேறு மருத்துவ கல்லூரிகளில் அரசு சேர்த்துகொள்ள வேண்டும் என்று கோரினார்கள், ஆனால் அரசு இதற்கு ஒத்துக்கொள்ளாததால் டிடி கல்லூரி மாணவர்கள் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தினுள் போராட்டத்தை ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவகல்லூரியில் இது போன்று தற்காலிக அனுமதி கடிதம் அளிக்கப்பட்டு சேர்ந்த பின் அனுமதி மறுக்கப்பட்ட போது அரசே அந்த மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்த்துக்கொள்வோம் என்று அறிவித்தது, மறு ஆய்வில் அந்த அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் இது பிரச்சினையாகவில்லை, ஆனால் டிடி கல்லூரி மாணவர்களை அரசு வேறு கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள ஒத்துக்கொள்ளவில்லை.

மாணவர்களின் போராட்டங்களை கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கையிலும், ஏற்கனவே தீனதயாள் நாயுடுவின் ஏமாற்று வேலைகள், வக்கிரமான செயல்பாடுகளால் நொந்து போயிருக்கும் ஏமாற்றப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களை அரசும் வதைக்கிறது, மாணவ, மாணவிகளின் போராட்டத்தை கடுமையாக கையாள்வது, மாணவர்களை மற்றுமின்றி போராடும் பெற்றோர்களையும் அடக்குமுறையால் அப்புறப்படுத்துவது என்ற அரசின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

ஃபேஸ்புக்கில் நடக்கும் மனுஷ்யபுத்திரன் - கிஷோர் கே ஸ்வாமி சண்டைகளுக்கெல்லாம் பல மணி நேரங்கள் ஸ்லாட் ஒதுக்கி விவாதங்கள் நடத்தும் பல சேனல்களும், ஃபேஸ்புக் பஞ்சாயத்துகளுக்கெல்லாம் பக்கங்கள் ஒதுக்கும் அச்சு ஊடகங்களும் இந்த கல்லூரி மாணவர்கள் ஏமாற்றப்பட்டது குறித்தும், அரசு இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் எந்த விதமான விவாதங்களையும் வலியுறுத்தல்களையும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமானது.

டிடி மருத்துவ கல்லூரி மாணவர்களி போராட்டங்கள் கோரிக்கைகளை அப்டேட்களை அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம், I Support DD Medical College Students - fight for Justice பக்கத்தில் ஒரு லைக் போட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும்.

# டிடி கல்லூரி மாணவர்களின் போராட்டம் பிரச்சினை குறித்து பலருக்கும் தெரிய இதை ஷேர் செய்யுங்கள், டிவி, பேப்பர் ஊடகங்களிடம் இது விவாதத்துக்குள்ளாகட்டும்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media