BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 11 September 2013

அமைதிப்படை மணிவண்ணனும் அத்வானியும்

  அமைதிப்படை மணிவண்ணனும் அத்வானியும் via @Poovannan Ganapathy

கடந்த சில மாதங்களாக பா ஜ க வில் நடந்து வரும் காட்சிகள் அச்சு அசல் அமைதிப்படை படத்தில் தேர்தலில் மணிவண்ணனால் நிறுத்தி வைக்கப்பட்ட சத்யராஜ் தேர்தல் முடிவுகள் வர வர நடந்து கொள்ளும் /அவரை சுற்றி இருப்பவர்கள் நடந்து கொள்ளும் காட்சிகளை ஒத்திருக்கின்றன


அமைதிப்படை படத்திலாவது தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றி பெற்றதால் அனைவரையும் தூக்கி எறிகிறார் சத்யராஜ்.மோடி அப்படி கூட கிடையாது.
ராப்ரி தேவி போல திடீரென்று நேரடியாக மணிவண்ணனால் மன்னிக்கவும் அத்வானியால் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்டவர்.ராப்ரி தேவியின் திடீர் முதல்வர் நிகழ்விலாவது கட்சியில் ,தேர்தெடுக்கப்பட்ட எம் எல் ஏக்கள்,முன்னாள் முதல்வர்கள்,மந்திரிகளின் எதிர்ப்பு அவ்வளவு கிடையாது.ஆனால் இங்கு நேரடியாக அனைவரின் எதிர்ப்பையும் மீறி மணிவண்ணின் தயவினால் முதல்வராக ஆனார் மோடி

முதல்வரான இருக்கும் போது நடைபெற்ற ஆட்சியின் பெரும்சாதனையான குஜராத் கலவரங்களுக்கு பின் இன்று அவரின் ஜட்டியை துவைக்க சண்டை போடும் அதே கூட்டம் அவரை பதவியை விட்டு விலக வைக்க முயற்சித்தது.அன்று அவரை காப்பாற்றி முதல்வராக தொடர்ந்து இருக்க முக்கிய காரணம் மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி

கட்சியை மட்டும் அல்ல இரண்டாம் இரும்பு மனிதர் என்ற பட்டத்தையும் அல்லவா சேர்த்து அடிக்கிறார் மோடி

அரசியலில் நன்றி இல்லாத தலைவர்களை பார்த்திருக்கிறோம்.ஆனால் நன்றி இல்லாத தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி பா ஜ கா தான்.நெசமாலுமே பார்ட்டி வித் எ difference தான்

இந்தியாவில் உள்ள பல நூறு கட்சிகளில் எந்த கட்சியை எடுத்து கொண்டாலும் (நம்ம கார்த்திக்குக்கு கூட ஆதரவா சில பேர் இருப்பாங்க)கட்சியின் முக்கியமான தலைவரை,ஐம்பது ஆண்டுகள் கட்சியை வளர்த்தவரை தூக்கி எறியும் நிலை வேறு எந்த கட்சியிலும் தென்படவில்லை.

என் டி ஆர் ஐ தூக்கி விட்டு மருமகன் ஆட்சியை பிடிக்கும் போது கூட அவர் சிவபார்வதியின் கைப்பாவையாக மாறி விட்டார் ,அவரை விட்டு விட்டால் உடனே திரும்பி ஆட்சியை தருவோம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. .கட்சியிலும் ,பொதுமக்களிடமும் அவருக்கு தொடர்ந்து ஆபரிதமான ஆதரவு இருந்தது.
அமைதிப்படை மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி ஜட்டி துவைக்க போட்டி போட போகிறாரா அல்லது அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா என்பதை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம்

@Poovannan Ganapathy அவர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது இது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media