கர்நாடகாவில் மைசூர் அரண்மனை, நகரகுவாவில் உள்ள திப்பு சுல்தான் கோட்டை என சரித்திர புகழ்பெற்ற பல்வேறு பழமையான வரலாற்ற் இடங்கள் உள்ளன. இங்கு பல தமிழ், கன்னட, இந்தி படங்கள் படமாக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் சினிமா ஷூட்டிங்கினால் வரலாற்று சின்னங்கள் உள்ள இடங்களில் ஷூட்டிங் நடத்த கர்நாடக அரசு தடை விதித்திருக்கிறது.
இவ்வாறான தடை என்பது அரசு தனது காலில் தானே சுட்டுக்கொள்வது போன்றது என்று கன்னட இணைய பத்திரிக்கை கருத்து தெரிவித்துள்ளது, மேலும் குறிப்பிட்டதாவது இம்மாதிரி இடங்களில் ஷூட்டிங் நடப்பதால் இந்த இடங்களின் புகழ் சினிமா மூலமாக பரவுகிறது என்றும் அதனால் இந்த இடங்கள் சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுத்து சுற்றுலா தளங்களாக புகழ் பெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சித்ரதுர்கா என்ற படத்தில் தான் நகரகுவாவில் உள்ள திப்புசுல்தான் கோட்டை படமாக்கப்பட்டது அதன் பின் அது சிறந்த சுற்றுலா தளமாக மாறியது என்றும் ராஜ்குமார் ஸ்ரீராகவேந்தர சுவாமிகள் படத்தில் நடித்த பின் மந்த்ராலயாவுக்கு அனைத்து சாதியினரும் மதத்தினரும் சென்று பார்க்கும் இடமாக மாறியது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.