BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 September 2013

யா யா - விமர்சனம், - சந்தானம், பவர்ஸ்டார், சிவா கூட்டணி

சந்தானம் ஹீரோவாய் புரொமோசன் ஆகி செம ஹிட்டடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வெற்றிக்கு பின் உடனடியாய் ஆரம்பிக்கப்பட்ட படம், அதேபோல சந்தானம், பவர்ஸ்டார் கூட்டணியில் சிவாவையும் சேர்த்துக்கொண்டு.



நீங்கள் இதுவரை பார்த்த படு மொக்கையான படங்களின் லிஸ்ட் எடுங்கள்.. அதில் நம்பர் 1 படத்தை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள். அதைவிட மொக்கையாய் ஒரு படம் இருக்க முடியுமா என கற்பனை செய்து பாருங்கள். இருக்கவே முடியாது என தோன்றும். அப்படியெல்லாம் நிம்மதியாகிவிடாதீர்கள். இருக்கு. அதுதான் இந்த யா யா படம். இதை படம் என்று சொல்வது திரைத்துறையையே அவமானப்படுத்துவது போலாகும்.

கடந்த சில ஆண்டுகளாய் காமெடி படங்கள்  தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கின்றன. செல்வராகவன் போன்ற சீரியஸ் டைரக்டர்கள் புலம்பும் அளவுக்கு அவற்றின் தாக்கம் இருக்கிறது.

ரொம்ப பெரிய அப்பாடக்கரான காமெடியெல்லாம் தேவையில்லை.. லைட்டா அங்கங்கே சிரிக்கவச்சா கூட போதும் பாஸூ என ஆடியன்சும் பல காமெடி படங்களை ஓட வைத்து வாழவைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் கேடிபில்லா, வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதுதான் ட்ரெண்டு போலருக்கு..நாமும் டப்புன்னு ரெண்டு காமெடி ஆர்டிஸ்ட் கால்சீட் வாங்கி அவசர அவரசமாய் ஒரு கதையை ரெடி பண்ணி படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணி கல்லா கட்டலாம்னு ஒரு கூட்டம் வேலை செஞ்சுகிட்டும் இருக்கு. இந்தப் படத்தை எடுத்தவர்கள் அந்த சிந்தனையில் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. காமெடி படம் எடுக்குறேன்னு நாலஞ்சு காமெடி ஆர்டிஸ்டுங்க கால்சீட் வாங்குனீங்க சரி.. அதுக்கு காமெடி வர்றமாதிரி ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணனும்னு தோனலையா பாஸ்..  ஸ்கிரிப்ட் பேப்பரை வச்சு சூட்டிங் பண்றதுக்கு பதிலா கால்சீட் பேப்பரை நம்பியே படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற படங்களின் தயாரிப்பாளர்களை நினைத்தால் கொஞ்சம் பாவமும், நிறைய கோவமும் வருகிறது. சிலபல கோடிகளை செலவழிப்பதற்கு முன் அந்த படத்தின் கதை என்ன, ஸ்கிரிப்ட் ரெடியாகிடுச்சா.. திரைக்கதை காமெடியாய் இருக்கிறதா.. அட்லீஸ்ட் ஒரு நாலு சீன்லயாச்சும் சிரிப்பு வருதான்னு யோசித்து நிதானமாய் படம் எடுக்காமல் ஏதோ அவசரத்திற்கு சூட்டிங் போனால் இப்படிப்பட்ட படங்களை எடுத்து தான் மாட்டிக்கொள்ளவேண்டிய கஷ்டமான நிலை ஏற்படும்.

 ‘தமிழ்படம்’ ல் ஒவ்வொரு ப்ரேமிலும் சிவாவைப் பார்க்கும் போது சிரிப்பு வரும். தில்லுமுல்லுவில் கூட ஓரளவுக்கு சமாளித்து பாஸாகியிருந்தார். இங்கே ஒவ்வொரு ப்ரேமிலும் எரிச்சலூட்டுகிறார்.  கூடவே சந்தானமும்.

சிவாவிற்கு ஜோடியாய் தன்ஷிகா.. பாவம். அவர் சிவாவின் மீது காதலில் விழும் போதும் சீரியஸாய் ஏங்கி டயலாக் பேசும் போதும்.. டாஸ்மாக்கில் பால்பாக்கெட்டிற்கு ஏங்கி நிற்பது போலிருக்கிறது.

சந்தியாவிற்கு சந்தானத்திற்கு ஜோடியாய் டீ-ப்ரொமோசன். நல்லாத்தான இருக்காரு, நடிக்கிறாரு.. ஏன் நல்ல சான்ஸ்கள் வரவில்லை என யோசிக்க வைக்கிறார்.

பவர்ஸ்டாரை வைத்து திணிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எரிச்சல். அவற்றில் பல கதாநாயக ரோல் டெமோ வீடியோ மட்டும் கொஞ்சம் சுமாராய், லேசாய் சிரிப்பூட்டுகிறது.. ஆனா அதுதான் படத்திலேயே டாப் சீன்னா பாத்துக்கங்க..

இந்தப் படத்தின் தரம் தெரிந்தோ என்னவோ இசையமைப்பாளரும் சம்பந்த சம்பந்தமில்லாமல் பின்னனி இசையெல்லாம் போட்டுவைத்திருக்கிறார்.

இயக்குநர் ஜ.ராஜசேகரன் எல்லா விதத்திலும் ஏமாற்றியிருக்கிறார்.

Thanks http://www.soundcameraaction.com


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media