BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 18 December 2013

தேவயானி கோபர்கே ஐ.நா.சபை அதிகாரியாக மாற்றம், முழு தூதரக அந்தஸ்து பெறுகிறார்

அமெரிக்காவை கடுப்பேற்றும் இந்தியா...

தூதரக அதிகாரி தேவயானி கோபர்கே ஐ.நா.சபை அதிகாரியாக மாற்றம், முழு தூதரக அந்தஸ்து  பெறுகிறார்



அமெரிக்காவில் விசா மோசடி விவகாரத்தில் நடுரோட்டில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்ட தூதரக அதிகாரி தேவயானி கோபர்கேவை  ஐ.நா.வின் நிரந்தர அலுவலலில்(permanent mission at United Nations)  வேலை செய்ய இடம் மாற்றியுள்ளார்கள், இதன் மூலம் தேவயானிக்கு முழு தூதரக பாதுகாப்பு அந்தஸ்து ( full diplomatic immunity) கிடைப்பதால் இனி அவரை எளிதாக கைது செய்யவோ தடுப்பு காவலில் வைக்கவோ முடியாது, அதற்குறிய பல்வேறு நடைமுறைகளை செய்தாக வேண்டும்.

தேவயானி கைதை தொடர்ந்து இந்தியா ஆவேசமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அதே சமயம் வீட்டு வேலைக்கு அழைத்து சென்றவருக்கு விசாவில் குறிப்பிட்ட சம்பளம் வழங்காதது, வீட்டு வேலை செய்ய வந்த பெண்ணை அடித்தது போன்ற புகாருக்குள்ளாகியுள்ள தேவயானிக்கு இந்தியா இத்தனை சலுகைகள் வழங்குவது  தேவையா என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது.

ஒரு சிறிய கணக்கெடுப்பு

தேவயானிக்கு full diplomatic immunity கொடுத்தது சரி என்பவர்கள் லைக் போடவும், குற்றம் செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும், தேர்தல் ஸ்டண்ட்டுக்காக இதை இந்தியா பெரிது படுத்துகிறது என்று நினைப்பவர்கள் கமெண்ட் போடவும்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media