BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 17 December 2013

ஹோமோ செக்ஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை, அமெரிக்க தூதரக விவகாரத்தில் கடுமை காட்டும் இந்தியா


இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி பணிப்பெண் சம்பள விசயத்தில் அமெரிக்காவில் மிக மோசமாக கைது செய்யப்பட்டு நடத்தப்பட்டதை அடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது கடுமை காட்ட ஆரம்பித்துள்ளது இந்தியா.


இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரிகளில் சிலர் ஹோமோ செக்சுவல்கள் என்பதும் அவர்களின் செக்சுவல் பார்ட்னர்கள் இந்தியாவில் பல்வேறு விசாக்களில் தங்கியுள்ளதாகவும் இவர்கள் பற்றிய விவரங்கள் தங்களுக்கு தெரியும் என்றும் இந்தியாவில் ஹோமோ செக்ஸ் தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதால் இவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

டில்லி போலிஸ் அமெரிக்க தூதரகம் முன்பு போடப்பட்டுள்ள தடுப்புகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவி அமெரிக்க அதிகாரிகளுக்காக ஏர்போர்ட்டில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாஸ் சலுகைகளை நீக்கியுள்ளது, மேலும் அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்யும் அனைத்து இந்திய பணியாளர்களின் சம்பள விவரங்களை கேட்டுள்ளது.

அமெரிக்க தூதகரத்தில் வேலை செய்பவர்களின் மனைவிகள் பல்வேறு தரப்பட்ட வேலைகளில் இந்தியாவில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் முறையான வேலை செய்யும் விசா வைத்துள்ளார்களா என்று விசாரணையில் இறங்கியுள்ளனர் இந்திய அதிகாரிகள்.

வழக்கமாக அமெரிக்காவின் காலை நக்கி கிடக்கும் அளவுக்கு சொரணை இல்லாத இந்திய அரசு இந்த முறை காட்டும் வேகம் தேர்தலை கணக்கில் வைத்தே என்று பலரும் நம்புகிறார்கள்.

அப்துல்கலாம், பல்வேறு இந்திய அமைச்சர்களை சாக்ஸ் வரை உருவி பார்த்து விசாரணை என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் அவமானப்படுத்திய போது கண்டுகொள்ளாத இந்திய அரசு இப்போது நடந்து கொள்வது முழுக்க தேர்தலை மனதில் வைத்தே என்று பலராலும் யூகிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்காவிலிருந்து மது இறக்குமதி செய்து கொள்ள இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்தது, ஒரு வேளை இதற்கும் தடைவிதித்தால் அமெரிக்க அதிகாரிகளை நம்ம ஊர் டாஸ்மாக்கில் சரக்கடிக்கும் கண் கொள்ளா காட்சியை கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

ஒரு சிறிய கணக்கெடுப்பு

# இது வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று நினைப்பவர்கள் லைக் போடவும்,

# இந்தியாவுக்கு உண்மையிலேயே தன் குடிமக்கள் பாதுகாப்பு மீது உள்ள கடமை காரணமாக செய்கிறது என்பது போன்று வேறு  காரணங்கள் தோன்றினால் அதை கமெண்ட்டில் போடவும்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media