சூப்பர் ஸ்டார் படித்த பள்ளியை சீரமைக்க கோரி, ரசிகர்கள் வலியுறுத்தல்
பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படித்த அரசு கன்னட துவக்கப் பள்ளியின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, புது கட்டிடம் கட்டும் பணி இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக 86 லட்ச ரூபாய் கர்நாடக மாநில அரசால் ஒதுக்கபட்டுள்ளது.
புதிய கட்டிடம் கட்டும் பணி, நடந்து முடிகிறது போல் இல்லாததால், பள்ளியின் கட்டிட நிலை மேலும் மோசம் அடைந்து வருவதாலும், ரஜினி ரசிகர்கள், இப்பிரச்சனைக்கு இம்மாதம் 21ம் தேதிக்குள் ஒரு தீர்வு வர வேண்டும், இல்லையென்றால், கர்நாடகா முழுவதும் தர்ணா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுப்பற்றி கல்வி துறை அமைச்சருக்கும், ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியிருப்பதாக கர்நாடக மாநில ரஜினி ஜி சேவா சமிதி துணை தலைவர் பிரகாஷ் கௌடா கூறியுள்ளார். மேலும், ரஜினிகாந்த் படித்த பள்ளி, அரசு பள்ளியாக இல்லாமல், தனியார் பள்ளியாக இருந்து இருந்தால், ரசிகர்களே முன் வந்து சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டு இருப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.