யாருடன் கூட்டணி? தனித்து போட்டியா? கூட்டணி குறித்து விஜயகாந்த் மாநாட்டில் பேசியது
தேமுதிக சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது, திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் விஜயகாந்தை திமுக கூட்டணிக்கு அழைத்துள்ளார்கள், ஆனால் விஜயகாந்த் பதில் எதுவும் தரவில்லை, இது குறித்து செய்தியாளர்கள் ஒரு முறை கருணாநிதியிடம் கேட்டதற்கு இனி விஜயகாந்த் தான் பதில் சொல்ல வேண்டும் என்று எரிந்து விழுந்தார், இதே போன்றே பாஜகவும் தேமுதிகவுடன் தீவிரமாக கூட்டணி பேசி வருகிறது.
இப்படி திமுக, பாஜக, காங்கிரஸ் என மூன்று பக்கமும் விஜயகாந்தை கூட்டணிக்கு இழுத்து வரும் வேளையில் இன்று கூட்டணி குறித்து மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, கூட்டணி குறித்து மாநாட்டில் பேசிய விஜயகாந்த் மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்களை நோக்கி கூட்டணி வேண்டுமா? தனித்து போட்டியா என்றார், தனித்து போட்டியிடுவோமா? என்று திரும்ப திரும்ப கேட்டார், தொண்டர்களும் தனித்து போட்டியிடுவோம் என்று முழங்கினார்கள்.
இதை அடுத்து தொண்டர்கள் விருப்பப்படி தனித்தே போட்டியிடுவோம் என்று கூறிவிட்டு கடைசியில் தலைவர் சொன்னால் தொண்டர்கள் கூட்டணிக்கும் தயார் தான் என்று சொன்னார், தனித்து போட்டி என்று விஜயகாந்தும் தொண்டர்களும் முழங்கினாலும் கூட்டணி வைப்பாரா? இல்லையா? என்பதையே உறுதியான முடிவாக கூறாமல் குழப்பியுள்ளார் விஜயகாந்த்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.