எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களில் திருநங்கைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. பயணிகளிடம் பணம் கேட்டு சிலர் தொல்லை செய்கின்றனர். காசு தராதவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.
ரயில்களில் திருநங்கைகளின் பணம் பறிக்கும் செயலை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருத்தணி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம் புறநகர் ரயில்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் பாதுகாப்புக்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயணிகளிடம் திருநங்கைகள் அச்சுறுத்தி பணம் பறித்தால் இந்திய தண்டனைச் சட்டம் 384-வது பிரிவின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 508-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யும்போது, நீதிமன்றம் வெறுமனே 500 ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கிறது. இனிமேல் சட்டப்பிரிவு 384 பயன்படுத்தப்படும்’’ என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.