நேற்று சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா சொத்து பற்றிய விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அவரது வழக்கறிஞருக்கு, அவரது ஒருநாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதை கேள்விப்படும் போது ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் எவ்வளவு என்று அனைவருமே தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வழக்கறிஞரே அம்மையாரின் உண்மையான சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் ஜெயலலிதாவின் சொத்துக்களாக வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கரில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கோடநாட்டில் 800 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் 1190 ஏக்கர் ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர், மற்றும் ஹைதராபாத்தில் 200 ஏக்கரில் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆனால் ஜெயலலிதாவோ தன்னை ஒன்றுமில்லாத ஏழை எனவும் பச்சைக்குழந்தை போலவும் தன்னை கருதி பிரச்சாரம் செய்து வருவகிறார்,” என்று கருணாநிதி பேசினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.