நாடு முழுவதும் மக்களவைத்தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு வடகிழக்கு மாநிலங்களான அசாமின் 5 தொகுதிகளிலும் திரிபுராவின் ஒரு தொகுதியிலும் நடைபெறுகிறது.
அசாமில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் தேஜ்புர், கோலியாபுர், ஜோராஹாட், திப்ருகர், லக்கிம்புர் ஆகிய 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திரிபுராவில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் திரிபுரா மேற்கு தொகுதிக்கு மட்டும் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடக்கிறது. இங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தாவும் காங்கிரஸ் வேட்பாளர் அருணோதய் சஹாவும் போட்டி யில் உள்ளனர். 12 லட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்க இருக்கும் இந்தத் தொகுதியில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அசாமில் மீதம் உள்ள மூன்று தொகுதிகளுக்கும் திரிபுராவின் ஒரு தொகுதிக்கும் வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.