திமுகவில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக திமுக பொருளாளர் ஸ்டாலினை குற்றஞ்சாட்டி, திமுக எம்.பி மற்றும் நடிகர் ஜே.கே. ரித்தீஷ் அவரை கடுமையாக சாடி பேசியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:
தலைமையுடன் நெருக்கமாக இருப்பவர்கள் தவறு செய்துள்ளனர். தேர்தலில் அவர்கள் செய்த தவறுகளுக்கு நாங்கள் ஆதாரம் வைத்துள்ளோம். உள்கட்சித் தேர்தலை நடத்துவதாகக் கூறிவிட்டு, ஸ்டாலின் யாரை சுட்டிக்காட்டினாரோ, அவர்களுக்கு மட்டுமே பதவி கொடுத்தார்கள். ஸ்டாலின் தானாக கட்சி நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமென்றால், எதற்கு தேர்தல் நடத்த வேண்டும்? முதலிலேயே நியமனம் செய் திருக்கலாமே. உண்மையான கட்சிக்காரர்கள் தமிழகம் முழுவதும் கோபத்துடன் உள்ளனர்.
ராமநாதபுரத்தில் சுப.தங்க வேலனை மாவட்டப் பொறுப்புக்கு கொண்டு வந்தார்கள். என்னை கட்சிக்கு அழைத்து வந்தவர் ராமநாதபுரம் நகர செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம். அண்ணன் அழகிரியும், கனிமொழி அக்காவும் என்னை கட்சியில் வளர்ச்சிபெற வைத்தார்கள். தங்கவேலன் எனக்கு உறவுக்காரர்தான். அவருடன் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் எனக்கு இல்லை. ஆனால் தேர்தல் என்ற போர்வையில் அவரது ஆட்களுக்கு பதவி கொடுத்து, கட்சிக்கு உழைத்தவர்களை ஓரங்கட்டி விட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் 90 ஆயிரம் புதிய உறுப்பினர்களை முறையாக சேர்த்துள்ளேன். எனக்கு தான் ஆதரவு அதிகமுள்ளது. அவர் நியாயமாக என்னுடன் போட்டி போட்டு பார்க்கட்டும்.
வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது. அழகிரிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு உள்ளது. முதுகுளத்தூருக்கு அவர் அண்மையில் வந்திருந்தார். கட்சிக் காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி வரவேற்பு அளித்தனர். இந்த தகவல் கட்சித் தலைமைக்கும் தெரிந்திருக்கும். ஸ்டாலின் தலைமையை நிச்சய மாக கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உள்கட்சித் தேர்தல் நடத்தியதில் அவரது அணுகுமுறை சரியில்லை. ஒரு கட்சியின் பொருளாளர், கட்சியில் இருக்கும் அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும். அவரே குறிப்பிட்ட ஆட்களை தனது ஆட்கள் என்று அணி சேர்த்தால், அவர் எப்படி தலைமைப் பொறுப்பில் அனைவரையும் அரவணைத்து செல்வார்?
கனிமொழி அக்காவுக்கும் கலைஞர் டிவிக்கும் எந்த சம்பந்த முமில்லை. ஆனால் தேவையில் லாமல் 2ஜி பழியை கட்சிக்காக சுமக்கிறார். அவரையும் சரியான உயர்ந்த நிலையில் கட்சித் தலைமை வைக்கவில்லை. தலை வரிடம் (கருணாநிதியிடம்) உள்ள பொறுமை அக்காவுக்கும் இருப்பதால், மிகுந்த பொறு மையுடன் கட்சி நடவடிக்கைகளை அனுசரித்து செல்கிறார்.
இவ்வாறு ஜே.கே.ரித்தீஷ் கூறியிருந்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.