நேற்று இரவு திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்த தைரியத்தில் ஓட்டு கேட்க பொதுமக்களிடம் வருகிறார் என கேட்டு, அவரை கடுமையாக சாடி பிரச்சாரம் செய்து இருந்தார்.
பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
"தலைவர் கலைஞர் ஆட்சியில் மேலக் கோட்டையில் சமத்துவபுரம் கட்டப்பட்டது. 700 தொகுப்பு வீடுகள், 18 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது, 4 வழி தேசிய நெடுஞ்சாலை, ரிங் ரோடு என திருமங்கலம் பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஆனால் எதையுமே செய்யாத ஜெயலலிதா அம்மையார் எந்த தைரியத்தில் ஓட்டு கேட்க வருகிறார்?
மன்னாதி மன்னன் படத்தை நான் படிக்கும் போது பள்ளிக்கு செல்லாமல் 8 முறை பார்த்துள்ளேன். அதில் வரும் பாடல் வரிகளை எழுதி படிக்கிறார். நான் பாடவே செய்வேன் என்று அச்சம் என்பது மடமையடா பாடலை பாடினார். அச்சம் என்பதால்தான் வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டிருக்கிறார். எனவே அம்மா ஆட்சி என்பது மடமையடா, நாளை தமிழகம் காப்பது கலைஞரடா என்று மாற்றி பாட வேண்டும்.
இவர் அமைதியாக கொட நாட்டில் ஓய்வு எடுத்து கொண்டுள்ளார். 3 மாதத்தில் மின்வெட்டை சீராக்குவேன் என்றார் இன்று வரை செய்யமால் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என பல்வேறு துரோகங்களை செய்து வருகிறார்.
தன்மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவில்லை என்ற காரணத்துக்காக பி.ஜே.பி. கூட்டணியை கவிழ்த்து, ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மறுதேர்தல் நடத்த காரணமாக இருந்தார். பொய்யை தவிர எதையும் பேசாதவர் ஜெயலலிதா. இந்த அ.தி.மு.க. எக்ஸ்பிரஸ் செங்கோட்டை செல்லும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இந்த எக்ஸ்பிரஸ் பெங்களூரை தாண்டாது என்று நான் சொல்கிறேன். இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் மதச்சார்பற்ற ஆட்சி அமையும். எதையுமே செய்யாத ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவீர்களா?" என்று ஸ்டாலின் பேசியிருந்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.