சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடுபவர்களை அங்கிகரிக்கும் விதமாக அவர்களுக்கு விருது ஒன்றை அறிவித்து உள்ளது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை . இதனை அந்த துறையின் அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார் .நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிளும் உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி ரூ.25000 மற்றும் சான்றிதழுடன் இந்த விருது வழங்கப்படும் .
இந்த துறையினருடன் பொது மக்கள் கலந்துரையாடுவதற்கு 2 ஈமெயில்களும் 1 பேஸ்புக் கணக்கும் தொடங்கப்பட்டு உள்ளது . அவற்றின் முகவரி இதுவே, min-wcd@nic.in, help-wcd@nic.in, www.facebook.com/ministryWCD.
விருது கிடைச்சு விட்டது 33 சதவீத ஒதுக்கீடு எப்போது வருமோ என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் நம் நாட்டின் கண்கள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.