நேற்று பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதியின் கூட்டு அமைச்சரவை உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக நாடாளுமன்றத்தில் தனது முதல் உரை ஆற்றினார் .
அந்த உரையின் முக்கிய அம்சங்களைக் கீழ்க் காண்போம் !!!
நமது நாடு இப்போது ஊழல் இந்தியா என்று அழைக்கப்படுகிறது . ஊழல் இந்தியாவை திறமை வாய்ந்த இந்தியாவாக மாற்றுவோம் . இந்த உலகில் மனித ஆற்றல் தேவைப்படுகிறது . நமது அண்டை நாடான சீனா முதுமை அடைந்து கொண்டு இருக்கிறது , நாம் இளமை அடைந்து கொண்டு இருக்கிறோம் . எனவே நமது முக்கிய கடைமை நம் இளைஞர்களின் திறமை வளர்பபதே ஆகும் .
நான் இந்த வீட்டிற்கு புதிதாக வந்துள்ளவன் . என் தவறுகளை மன்னிக்கவும் .
ஜனாதிபதி சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிப்போம் .
மேலும் பாலியல் வன்முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்வதை நிறுத்த அனைத்து தலைவர்களுக்கும் கோரிக்கை வைக்கிறேன் . எப்போதும் அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பது சரி இல்லை . பெண்கள் பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்ய வேண்டும் .
வெற்றிகள் நாங்கள் படிப்பதற்கு பாடங்கள் கொடுத்து இருக்கிறது . எங்களுக்கு பொறுமையை கற்று கொடுக்கிறது . முன்னோர்களின் ஆசியினால் நாங்கள் கடுமையாக இருப்பதில் இருந்து காப்பாற்றப் படுவோம் .
நாங்கள் வறுமையில் இருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களை வறுமைக்கு எதிராக போராட வைப்போம் .
எதிர் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு முன்னேற்றம் நோக்கி பயணிப்போம் .
நாங்கள் பண வீக்கத்தை குறைக்க உறுதி அளித்துள்ளோம் . எங்களின் லட்சியமும் அது தான் . பண வீக்கத்தை எங்கள் தேர்தல் வாக்குறுதியில் இருப்பதினால் மட்டும் அதை நாங்கள் செய்யப் போவதில்லை . ஏழைகள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறோம் .
மாநிலங்களிடையே நடக்கும் போட்டியை வரவேற்கிறோம் . குஜராத்தை பின்னுக்கு தள்ளி விட்டோம் என்று மற்ற மாநிலங்கள் சொல்வதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன் .
மஹாத்மா காந்தி சுத்தமாக இருப்பதில் மிகுந்த அக்கறைக் காட்டினார் . வாருங்கள் நாமும் துய்மையான இந்தியாவை உருவாக்க உறுதி எடுப்போம் . நமது தேசத்தின் தந்தையின் 2019இல் 150 ஆம் ஆண்டு விழாவில் அவருக்கு துய்மையான இந்தியாவை பரிசளிப்போம் .
விவாசய துறையில் புதுமைகள் புகுத்த வேண்டும் . எவ்வளவு வேகமாக நாம் புதிய நுட்பங்களைக் கொண்டு வருகிறோமோ அவ்வளவு லாபம் நமக்கு கிடைக்கும் . மண் வளத்தை அதிகரிக்க வேண்டும் . இதற்காக ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் .
காந்தி அவர்கள் சுதந்திர போராட்டத்தை ஒரு பெரிய போராட்டமாக மாற்றினார் . ஒரு சாதாரண தொழில் செய்பவர் கூட தான் இந்தியாவிற்காகப் போராடுவதாக எண்ண வைத்தார் . அதை போல இப்போது நாம் முன்னேற்றதிற்காக போராடுவதும் ஒரு பெரிய போராட்டமாக மாற வேண்டும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.